PEG 2










மணி ரெண்டை தாண்டியிருந்தது. பிரசாத் பின்னாலிருந்த சோபாவில் சாய்ந்து கொண்டே ,ஒரு சிகரட்டை பற்ற வைத்தார். என்னை நோக்கி சிகரெட் பாக்கெட்டை நீட்டினார்.'இந்த தடவ நீ என்ன சொன்னாலும் எம்மூஞ்சுல எந்த Reaction னும் காட்டமாட்டேம்பா' என்றார். நான் சிரித்துக்கொண்டே 'வேணாம்' என்கிற சைகையாய் தலையாட்டினேன்.

'ஏன் சார் ஆள் பாக்க பசு மாறி இருந்துகிட்டு, பேச ஆரம்பிச்சா பொளந்து கட்டுறீங்களே. எந்த ஊரு சார் நீங்க???' என கேட்டேன். உரையாடல்கள் நீள இது போல் எடுத்து கொடுத்தல் அவசியம். நான் அப்பணியை செவ்வனே செய்தேன்.எனகென்னமோ இந்த ஆள் ஒரு சுரங்கமாய் தெரிந்தார்.



' சங்கரன்கோயில் தான் சொந்த ஊரு...' எனச்சொல்லி மேல்நோக்கி சிகரெட் புகையை விட்டார்.
' ஓ....' என உதடு குவித்தேன்.
' என்னா ஊர் தெரயுமாயா அது??' என்றார்.

சில கேள்விகளுக்கு நாம் பதில் சொல்ல தேவை இல்லை. அதுக்குள்ளயே பதிலோ அர்த்தமோ புதைந்து கெடக்கும் . '' நீயெல்லாம் உருப்படுவியா??, மச்சான் அவ எப்டி இருந்தா தெரியுமா??, டேய் வீட்ல சொல்லிட்டு வந்தயா??'' இவையெல்லாம் அந்த வகை. மேலே நம்மாளு சொன்னதும் அதே ரகம் என்பதால் ,பதில் சொல்ல தேவையில்லாமல் அவர் மீண்டும் வாய்திறக்க காத்திருந்தேன்.

'இப்ப நிறைய Mature ஆகிட்டேன். சின்ன வயசுல எல்லாம் திமிர் பிடிச்சு அலைஞ்சேன்.யாரையும் மதிக்க மாட்டேன்.என் கொள்கைய மதிக்காதவுங்கள நானும் மதிக்க மாட்டேன். கோவம் வந்தா எங்கப்பாவையே போயானு சொல்லிருவேன்.எங்க மாமா ஒருத்தரு தி.க ல இருந்தாரு..அவர்கூட இருந்ததாலோ என்னவோ 'நாத்திகம்' எனக்கு பிடிச்சுபோச்சு.ஆனா கட்சி,கூட்டமெல்லாம் பிடிக்காது. வெறித்தனமான நாத்திகனா ஏழாங்கிளாஸ் படிக்கிறப்பவே மாறிட்டேன்.எங்கம்மா சாமி கும்புடுடா னு கெஞ்சுவாங்க. எங்கப்பா ஒரு படி மேலையே போய் எனக்கு பேய் புடிசிருச்சுனு பூசாரிஎல்லாம் கூட்டிட்டு வந்து என்னை கடுப்பாக்கிட்டார். ஊர்ல கூட 'பேய் புடிச்ச பய' னு தான் என்னை பத்தி பேசுவாய்ங்க.... பள்ளிகூட நண்பர்களெல்லாம் செல்லமா 'சாத்தான்' னு தான் கூப்டுவாங்க. எனக்கு அதெல்லாம் ரொம்ப பெருமையா அப்போ இருந்தது.' என சொல்லிக்கொண்டே விஸ்கியை ஒரு மண்டு மண்டினார். பின்னர் அவரே தொடர்ந்தார்.

' இத கேளேன்.நா எட்டாவுது படிக்கிறப்போ, வீம்புக்குனே எவனோ என்னோட Desk மேலே சாமி படத்த ஒட்டி வச்சிட்டானுங்க.நாம தான் சாத்தானாச்சே.. கிளிச்சி தூர எரிஞ்சிட்டோம். அதனால எனக்கும் குமார்னு ஒரு பயலுக்கும் சண்டை ஆகிடுச்சு. அவன் சும்மா இல்லாம,'தைரியமான ஆளா இருந்தா போட்டிக்கு வா. இங்க இருந்து யார் நம்ம மலைக்கோயிலுக்கு வேமா ஓடிப்போய் உச்சியை தொடுராங்களோ அவுங்க தான் ஜெய்ச்சவுங்க. நா ஜெயிச்சுட்டா நீ நம்ம ஸ்கூல் ஆலமரத்து பிள்ளையாருக்கு 50 குடம் தண்ணி ஊத்தணும். நீ ஜெய்ச்சா நீ என்ன சொன்னாலும் நா கேக்குறேன்' அப்டினான். நா யோசிச்சிட்டு சரி னு சொல்லிட்டேன். 'அவன் தோத்துட்டா அஞ்சு நாளைக்கு திருநீறு பூசக்கூடாது, இந்த வெள்ளிக்கிழமை கோயிலுக்கு போககூடாது'
அப்டின்னு நானும் அறிவிச்சேன். அவனுக்கு பின்னாடி எங்க கிளாசே இருந்துச்சு. டேய் குமார்..மாரியம்மா நம்ம பக்கம் இருக்காடா எப்டியும் நீ தான் ஜெய்ப்பே னு அவனுக்கு சிலர் கயிறெல்லாம் கட்டி விட்டாங்க. என்ன கொடுமைனா ஜெய்ச்சது நான் தான். நம்ம குமார் அரைமணிநேரமாவுது அழுதிருப்பான்.அப்புறம் வேற வழி இல்லாம திருநீறு பூசாம தான் கிளாசுக்கு வந்தான்' அப்டினார்.

என்ன சார் இப்டி நம்பியார் மாறி இருந்திருக்கீங்க. உண்மையா சொல்லுங்க இப்போ உங்களுக்கு வருத்தமா இருக்குல்ல.இன்னமும் நீங்க நாத்திகர் தானா??..பொதுவா குழந்தை குட்டின்னு வந்தாலே எல்லாரும் அடங்கிருவாங்களே... னு சொல்லி அவர் வாய் பார்த்தேன்.

'நாத்தீகம்லாம் அப்டியே தான் இருக்கு. எதையும் பாசமா சொல்ல பழகிட்டேன்.மாற்று கருத்து உள்ளவுங்கள மதிச்சு பேசுறேன். யாராவுது என்னை கொல்ல வந்தா கூட..வாங்க காப்பி சாப்டுட்டு கொல்லலாம்னு சொல்ற அளவுக்கு ஒரு காந்தித்தனம் வந்திருக்கு.அதுவும் பிரியா வந்ததுக்கப்புறம் இந்த மூணு வருசத்துல ரொம்ப மாறிட்டேன்''.னு சொன்னார்.

''என்ன சார் உங்களுக்கு கல்யாணமாகி மூணு வருசந்தான் ஆகுதா?? நா உங்க புஜுலுவை பாக்குறப்போ அஞ்சு வயசிருக்கும்ணுல நெனெச்சேன்.'' னு எதார்த்தமாய் தான் கேட்டேன்.

அவர் லேசாய் முகம் மாறி , 'ஆமா அவளுக்கு அஞ்சரை வயசாகுது..' அப்டினார். ஏதோ முடிச்சு இருப்பது தெரிந்தது,அவர் முகத்திலும் குழப்பம் தெரிந்ததால் நானும் மௌனமானேன். பாட்டில் எழுபது சதவீதம் முடிந்திருந்தது.

கொஞ்ச நேரம் அவரும் எதுவும் பேசல. மெதுவா தாழ்ந்த குரல்ல அவராகவே ஆரம்பிச்சார்.


' புஜ்லு 'Adopted Child' சிவா.. ரெண்டு வருசத்துக்கு முன்னாடி செங்கல்பட்டுல ஒரு orphanage ல இவள பாத்தேன்.. அவுங்க அப்பா,அம்மா ரெண்டு பெரும் HIV ல செத்து போய்ட்டாங்க. Luckily இவளுக்கு எதுவும் இல்ல. ஆனா அங்க இருக்கிற Nurse ங்க கூட இவ பக்கத்துல வர மாட்டாங்களாம். வாரா வாரம் சென்னைல இருந்து இவள பாக்க Sweet பாக்ஸ், புது டிரஸ்னு வாங்கிட்டு போவேன். அப்பெல்லாம் என்னை 'Uncle' னு தான் கூப்பிடுவா. ஒரு வாரம் அவள பாக்க போறேன், குழந்தை அழுது கண்ணெல்லாம் வீங்கிருந்துச்சு. என்னடா செல்லம் என்னாச்சுனு கேட்டேன் ,'எனக்கு எங்க அம்மா ஞாபகம் வந்திருச்சு' னு சொல்லி ஏங்கி ஏங்கி அழுறா...என்னால தாங்கவே முடில..அப்டியே கொத்தா தூக்கிட்டு வந்துட்டேன்...ப்ரியாவும் இவ தான் நம்ம மூத்த பொண்ணுன்னு சொல்லிட்டாள். இப்போ எங்க வீட்டு தேவதை அவ தான். ரொம்ப புத்திசாலிப்பா எங்க புஜ்லு...' நிதானமாய் முடித்தார்.

' சார் என்ன சொல்றதுனே தெரில சார்...இதெல்லாம் நா சினிமால தான் சார் பாத்துருக்கேன்..சார் கைய பாருங்க அப்டியே முடிலாம் சிலிர்த்து நிக்குது..இந்த விசயத்துல உங்க மனைவியவும் பாராட்டியே ஆகணும்.உங்கள மாறி ஆளுகெல்லாம் இங்க வந்துட்டதால தான் இந்தியால மழை பெய்ய மாட்டேங்குது..' உண்மையாகவே கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு பேசினேன்.

' ஏன் டென்ஷன் ஆகுற... இன்னொரு மனுஷன் உலகத்துல இருக்கிறவரைக்கும் உலகத்துல யாரும் தனியாள் இல்ல... குடிச்சிட்டு சொல்றேன்னு நெனைக்காத....வாழ்க்கைல இந்த Second வரைக்கும் நான் நெனச்சபடிதான் வாழ்ந்துட்டு இருக்கேன்..எந்த வித Compromise ம் பண்ணிக்கல..' அவர் குரலில் சத்தியமாய் ஒரு கர்வம் இருந்தது.

' சார் நம்ம புஜ்ளுவோட பேர் என்ன சார்...நானும் கேக்கணும்னு நெனச்சிட்டு இருந்தேன்'

'மீரா '

' Nice Name'

சரி மணி அஞ்சாயிடுச்சு நா கெளம்புறேன்..அடுத்தொரு நாள் பேசுவோம்...' எனச்சொல்லி மெல்ல எழுந்தார்...

' சார் ஒரு சின்ன Request. நா சும்மா ஒரு தமிழ் Blog ஆரம்பிச்சு நேரம் கெடைக்கும் போதெல்லாம் எழுதுவேன். என்னையும் சேத்து அத ஒரு இருபது பேரு தான் படிப்பாங்க, இருந்தாலும் உங்க கூட இன்னைக்கு பேசிட்டு இருந்தத அப்டியே என் 'ப்ளாக்' ல எழுதணும் போல இருக்கு..எழுதலாமா ?? with your permission. ''

' அந்த அளவுக்கு நம்ம என்ன பேசினோம்னு தெரில...தாராளமா எழுதுங்க...' எனச்சொல்லி கதவை திறந்து கெளம்பினார்.

அவர் போனப்புறமும் என் அறை முழுக்க அவர் குரல் கேட்டுகொண்டிருப்பது போலவே இருந்தது.அந்த கணத்தில் அவர் குரலில் ஒரு பாட்டுக்கேட்டது ...ஆனா 'Lyrics' வேற ஆளோடது....

' தேடி சோறு நிதந்தின்று- பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி- மனம்
வாடித் துன்பம் மிக உழன்று -பிறர்
வாழ பல செயல்கள் செய்து -நரை
கூடிக்கிழ பருவம் எய்தி -கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும்- பல
வேடிக்கை மனிதரை போலே - நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ!!!'
-சுப்பிரமணிய பாரதி

----- முற்றும் --------------

'








கருத்துகள்

Raju இவ்வாறு கூறியுள்ளார்…
போன பதிவும் படிச்சே..இதுவும்.
அவருக்கு ஒரு ராயல் சல்யூட் பாஸ்.
இவன் சிவன் இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி ராஜு.... மொத மொத என்னோட பதிவுக்கு பின்னூட்டம் போடுற பிரபல பதிவர் நீங்க தான்....அடிக்கடி இந்த பக்கம் வாங்க
Gangaram இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல நடை .... நான் சொன்னது எழுத்து ..
நல்ல முன்னேற்றம் ....
Senthil இவ்வாறு கூறியுள்ளார்…
Super Sivaraj... keep going.. good one to share..
லெமூரியன்... இவ்வாறு கூறியுள்ளார்…
ஹேய் சிவா........!
வாய்ப்பே இல்ல ....இப்படியும் ஒரு charector ஆ..?
ஹ்ம்ம்...வாழ்க்கைல கடந்து பல பேர் போயிட்டே இருப்பாங்க...
சில பேரு மட்டும்தான் மனசுல நிப்பாங்க.....நம்ம பிரசாத் சாரும் அதுல ஒருத்தர்தான்....
அருமையான நடைல எழுதியிருக்கீங்க....!
வாழ்த்துக்கள்.
இவன் சிவன் இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி செந்தில், கங்கா

லெமூரியன் சார் மிக்க நன்றி..
JC இவ்வாறு கூறியுள்ளார்…
வணக்கம் சிவா ... கங்கா லிங்க் அனுபிச்சான்... உடனே படிச்சேன்... ஆபீஸ் டைம் தான்...
:) மிக்க அருமை ... இதயம் தொட்ட எழுத்துக்களில் இதுவும் ஒன்றாகி விட்டது ... I am not here to say this is fact ot fiction.. but indeed a awesome writing.... i liked ur narration... If Prasath was really there... tell him He has a fan in Mumbai.. someday i wish would like to meet him and his family... Thanks for sharing Siva..