பின்நவீனத்துவம்கலைஞர்கள் எல்லாருக்கும் தான் தனித்து தெரிய வேண்டும் என்ற மோகம் எப்போதும் இருக்கும். அதன் விளைவாக தன்னுடைய படைப்புகளில் வித்தியாசத்தை புகுத்த முயற்ச்சிப்பார்கள். படைப்பென்பது திரைப்படமாகவோ ,நாவலாகவோ அல்லது வேற எந்த வடிவமாகவும் இருக்கலாம்.உலகின் தலைசிறந்த கதை சொல்லிகள் எல்லோரும் ஒத்துக்கொள்ளும் மிகச்சவாலான திரைக்கதை யுக்தி தான் 'Non Linear story Telling'. தமிழில் 'வரிசையில்லா காட்சியமைப்பு' எனச்சொன்னாலும் நமக்கு எதுவும் வரி விலக்கு கிடைக்கபோவதில்லை என்பதால் நாம் 'Non Linear Story Telling' என்றே விளிப்போம். அதாவுது காட்சிகள் ஒழுங்கான வரிசையில் அமைந்திருக்கக்கூடாது . அடுத்தடுத்த காட்சிகளுக்கு சுத்தமாய் தொடர்பே இருக்ககூடாது.இறுதியில் ரசிகர்கள் கதை ஓட்டத்தை புரிந்து கொண்டு 'ஓ' வென சொல்லி ரசிக்கனும். கொஞ்சம் கரணம் தப்பினாலும் குழம்பிப்போய் 'காரி' உமிழும் அபாயமும் உண்டு. நம்மூர் பாசையில் சொல்லணும்னா காட்சிகளை கொத்து பரோட்டா போட வேண்டும். உலக சினிமாக்களில் இன்னமும் இந்த முறையை பயன்படுத்துறாங்க. நம்ம ஊர்ல அஞ்சு பாட்டுக்கும் ,ரெண்டு சண்டைக்கும் நடுவுல யாருக்கும் இந்த மாறி வித்யாசத்த வைக்க தோணல போல.

யாராவுது நான் கதை எழுத போறேன்னு சொன்னா நம்ம சினிமா வல்லுனர்கள் பார்க்கச்சொல்ற முக்கியமான படம் 'Pulp Fiction'. இத்திரைப்படமும் மேலே சொன்னா NLST வகை தான்.முதல் தடவ இந்தப்படத்தை பார்த்தவுடனே ஒருத்தருக்கு புரிஞ்சிட்டா கண்டிப்பா அவர் தெய்வக்குழந்தை. அடியேனுக்கு புரிய மூன்று முறையானது. ஆனா படம் புரிஞ்சவுடனே கிடைக்கிற பரவசம் இருக்கே அதை சொல்லி மாளாது. அதாவுது சிறுவர்கள் புத்தகத்தில் யானையின் படத்திற்கு பதிலா 1,2,3 னு எண்களை குழப்பி கொடுத்திருப்பார்கள் ,வரிசைப்படி அதை இணைச்சா நமக்கு அந்த முழு உருவம் கிடைக்கும்ல... கிட்டத்தட்ட அதே உணர்ச்சி தான் நமக்கு இறுதில கிடைக்கும்.கூடுதலா அழகான வசனங்கள், திறமையான நடிகர்கள் கிடைச்சிட்டா இவ்வகை படைப்புகள் காவியமாகவும் ஆவதுண்டு.அப்புறம் சும்மாவா மேற்படி படத்துக்கு 'Oscar' கொடுத்தாங்க. உலகின் தலைசிறந்த அஞ்சு படங்கள்ல இதுவும் ஒன்று என அடித்துச்சொல்கிறார்கள்.
.MOMENTO, IRREVERSIBLE என இந்த ரக படங்களை சொல்லிக்கொண்டே போகலாம். இந்த வியூகத்தை நம்ம மணிரத்னம் 'ஆயுத எழுத்து' ல கொஞ்சமா முயற்சி பண்ணிருப்பார் ,அதுக்கே நான் கண்கலங்கி பாராட்டுனேன். பிற்பாடு அது Amores Perros ங்கிற ஸ்பானிஷ் படத்தோட அப்பட்டமான காப்பினு தெரிஞ்சப்புறம் என்னை நொந்து கொண்டேன். இதுல என்ன கொடுமைனா
இந்த வகைப்படங்களில் சின்ன சின்ன வசனங்கள், கால நேரங்கள் , சமயத்துல கதா பாத்திரங்கள் கொட்டாவி விடுறது முதற்கொண்டு கவனிச்சுத்தொலையனும்.


சரி ' எலி ஏன் without ஆ ஓடுது..' அப்டின்னு கேக்குறீங்களா?? எதுக்கு இவ்வளவு பெரிய 'Lead' னா. கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு நானும் ஒரு NLST (Non linear.....) சிறுகதை முயற்சி பண்ணிருக்கேன். 'படிக்கிறதே இருபது பேரோ ,முப்பது பேரோ... உனக்கு இதெல்லாம் தேவையா னு?? ' சொல்றீங்களா .. மறக்காம படிச்சிட்டு கருத்தச்சொல்லுங்க.........குறை இருந்தா திருத்திக்கிறேன் ... குறை மட்டுமே இருந்தா நிறுத்திக்கிறேன்....

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அந்த உன்னதமான மாலைவேளையில் சென்னைவாசிகள் கொயகொய வென எறும்புகள் போல் அன்றைய பொழுது ஓய்ந்த களைப்பில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.
எந்த நேரமும் மழை பெய்யலாமென வானிலையில் ஒரு தயக்கம் இருந்தது. பேருந்துகளில் இந்தியாவின் மக்கள்தொகை தெரிந்தது.

' டிக்கெட் வாங்கதவுங்க வாங்கிக்கோங்க..செக்கர் வந்து மாட்டிக்கினினா ...500 ரூவா அழுவனும் பாத்துக்கோ...ஏம்பா கொஞ்சம் உள்ள போயேம்பா..அங்க என்ன பாம்பா இருக்கு...
வழில நிக்காதே... எம்மா மகராசி அந்த கூடைய எடுத்து ஓரமா வையுமா, ஒனக்கு புண்ணியமா போகும்...' கண்டக்டர் தன்னால் எவ்வளவு பேச முடியுமோ அவ்வளவு பேசினார்.

' எப்பா ....M.M.D.A காலனி ஆள் இறங்கனும்ப்பா..' என ஒரு பெரியவர் கத்திக்கொண்டே இருக்கையிலிருந்து எழுந்தார்.

' வண்டி நின்னப்ப என்ன தூங்கினிருந்தயா...ஒரு ஸ்டாப்பு முன்னாடியே ரெடியா இருந்துக்கோனு...கால் அவரா கத்தினு இருக்கேன்... வேமா இறங்குய்யா...' எனச்சொல்லிக்கொண்டே

விசில் கொடுத்தார்.

கல்லூரிப்பெண்கள், அலுவலக வாசிகள், வியாபாரிகள், இளைஞர்கள் என பல தரப்பட்ட மக்களும் கலந்திருந்தனர்.

' ரெண்டு அம்பது சில்ற கொடுப்பா... நா என்ன வச்சினா தர மாட்டுறேன் ... அம்பதுருபா நோட்ட நீட்னா என்னப்பா பண்றது..'


பேசிக்கொண்டே வந்து தன் இடத்தில் அமர்ந்து கொண்டு எதோ அட்டையில் எழுத ஆரம்பித்தார். பின்னால் சீட்டில் அத்தனை கூட்டத்திலும் சிலர் IPL பத்தி பேசிக்கொண்டு வந்தனர். அதையெல்லாம் கவனித்துக்கொண்டே வந்த இவர் ,' எய்தி வச்சிக்கோ...இந்த வாட்டி சென்னை டீம் செமி பைனல் கூட போவாது..' என கூட்டத்தில் பொத்தாம் பொதுவாக சொன்னார்.

கொஞ்சம் முன்பக்கம் திரும்பி காட்டமானார். ' டேய்..எவ்வளவோ சொன்னாலும் கேக்க மாட்டிங்களா டா.. அடுத்த பஸ்ல வந்தா கொறஞ்சா போவீங்க ... அங்க பார் ஒரு பரதேசி ஒரு கால வெளிய நீட்டிக்கினு தொங்குது...'


கண்டக்டர் பதட்டமாய் .' டேய் அவன புடிங்கடா... விழுந்திட போறான்....டேய் கருப்பு சட்ட................................' என அவர் கத்துவதற்கும் பின் சக்கரம் எதிலோ ஏறுவதற்கும் சரியாக இருந்தது..
எல்லாம் நொடிப்பொழுதில் நடந்து முடிந்தது... வெளியே ரோட்டில் அலறல் சத்தம் கேட்டது....*******************************************************************************************************
உ page no:3

5) a) The reaction between hydrogen and fluorine is an example of an oxidation-reduction reaction:

H2 + F2 → 2 HF

The overall reaction may be written as two half-reactions:

H2 → 2 H+ + 2 e (the oxidation reaction)

F2 + 2 e → ........

என எழுதிக்கொண்டிருக்கயிலேயே பேனாவை வைத்து நெற்றியில் உரசி ஒருமுறை யோசித்துக்கொண்டான் வினோத். ஆறடி இல்லாவிட்டாலும் கொஞ்சம் அசாத்தியமான உயரமாய் தெரிவான். அதற்கு அவனுது ஒடிசலான தேகம் கூட காரணமாய் இருக்கலாம். கண்ணாடியை ஒருமுறை சரிசெய்து கொண்டு ,வேர்த்திருந்த மூக்கையும் துடைத்து விட்டு மீண்டும் எழுத ஆரம்பித்தான். ஸ்கெட்சயும் பேனாவையும் மாறி மாறி உபயோகித்துக்கொண்டிருந்தான்.

' ஸ்..ஸ்..ஸ் வினோ .. டேய் .. Choose ல மூனாவுதுக்கு என்னடா answer .... ' என ரகசியமான குரல் பின்னாடி இருந்து வந்தது.

வினோத் முன்னால் திருப்பி கேள்வித்தாளை பார்த்து விட்டு பக்கவாட்டில் இரண்டு விரல்களை செய்கையாய் காண்பித்தான்.


கடைசி மணி அடிக்கும் வரை எழுதிக்கொண்டிருந்தான் வினோத். பிற்பாடு வரிசையாய் தான் எழுதிய பேப்பர்களை நூலால் கட்டிகொடுத்துவிட்டு அறையை விட்டு வெளியே வந்தான்.


' தேங்க்ஸ் டா வினோ... நீ மட்டும் 'One Marks' சொல்லாம போயிருந்தேனா ...நா சிங்கிள் டிஜிட்ல தாண்டா மார்க் எடுத்திருப்பேன்...' கேள்வித்தாளை 'ராக்கெட்' ஆக்கிகொண்டே சொன்னான் ஸ்ரீதர்.

'ஸ்ரீ..அப்போ இந்த தடவையும் chemistry ல காலியா... பாஸ் ஆற அளவுக்கு கூட படிக்க முடியாதாடா உன்னால...போன தடவ மாறி பாண்டியன் சார் புளிய மரத்துக்கு கீழ 'நீள் டவுன்' போட விடப்போறாரு பாரு..' வினோத் கண்களில் சின்ன கோபத்துடன் சொல்லிக்கொண்டிருந்தான்.

' விடுறா வினோ பாத்துக்கலாம்...நா எல்லா பாடத்துலயும் பாஸானா எங்கம்மா ரெண்டு வெள்ளிக்கிழமை விரதம் இருக்கேன்னு வேண்டிருக்காங்க. ஏற்கனவே அவுங்களுக்கு அல்சர் வேற இருக்கு. அதுனால தான் அவுங்களுக்கு அந்த கஷ்டத்த கொடுக்க வேண்டாமேன்னு .....' என குசும்பாய் இழுத்தான்.


வினோத் கொஞ்ச நேரம் குலுங்கி குலுங்கி சிரித்தான். ' உனக்கு வர வர கொழுப்பு கூடி போச்சுடா..' . இருவரும் பேசிக்கொண்டே பள்ளியின் வாசலுக்கு வந்து விட்டனர்.


' டேய் நேத்தே சொன்ன மாறி Treat கொடுக்கணும் இப்போ. எல்லாருக்கும் கொடுத்த மாதிரி சாக்லேட் கொடுத்து இந்த பிறந்த நாளுக்கு என்ன எமாத்திராதே...வேணும் நா இன்னொரு தடவ கூட சொல்லிடுறேன் 'Many More Happy Returns of the day'.... இப்பவே மழை வர மாறி வேற இருக்கு, அநேகமா நீ எதாவுது வாங்கிக்கொடுத்திருவேன்னு நெனைக்குறேன்' ஸ்ரீதர் பேசி முடித்துவிட்டு சிரித்துக்கொண்டே வினோத்தை பார்த்தான்.

' ஸ்ரீ.. மத்தியமே சொன்னேன்ல என்ன நடந்ததுன்னு...நீ வேற கிண்டாத...ஏழு மணிக்குள்ள போகலேனா அன்னைக்கு மாறியே வெளிய நிக்க வேண்டியதுதான்...' மூஞ்சில் கொஞ்சம் விரக்தியுடன் சொன்னான் வினோத். இருவரும் பஸ் ஸ்டாப்பை அடைந்திருந்தனர்.


' ஏன்டா வினோ ..எனக்கு 'பான்பராக்' ரவி னு ஒருத்தர தெரியும்...வேணும்னா அவருகிட்ட சொல்லி உங்கப்பாவை தூக்கிருவோமா??' என ஸ்கேலை கழுத்தில் வைத்து நாக்கை துருத்தினான் ஸ்ரீதர்.


' டேய்... ' என சொல்லி ஸ்ரீதரின் பொடனியில் விளையாட்டாய் அடித்தான். ஹோர்ன் சத்தம் கேட்டது...


' ஸ்ரீ நான் கெளம்புறேன் டா ..இந்த பஸ்ஸ புடிச்சாதான் கரெக்டா இருக்கும். இன்னொரு நாள் கண்டிப்பா ட்ரீட் உண்டு ' என கெளம்ப ஆயத்தமானான்.


' டேய் பஸ்ல இவ்வளோ கூட்டமா இருக்கு..இருடா அடுத்த பஸ்ல போலாம்...'


' இல்லைடா ஒன்னும் பிரச்சனை இல்ல ..அட்ஜஸ்ட் பண்ணிப்பேன்..' எனச்சொல்லிகொண்டே பேருந்தின் முன்பக்க 'FootBoard' ஐ நோக்கி ஓடினான்.

உள்ளே கண்டக்டர் ,'' டிக்கெட் வாங்கதவுங்க வாங்கிக்கோங்க..செக்கர் வந்து மாட்டிக்கினினா...' என பேசிக்கொண்டிருந்தது கொஞ்சமாய் அவனுக்கு கேட்டது. வண்டி கிளம்பியதும் திரும்பி ஸ்ரீக்கு டாட்டா காட்டினான்.


***************************************************************************************************

' அராமலே....அராமலே....' என்று ஹால் முழுக்க அலறிக்கொண்டு இருந்தது.


' வினோத்..இப்ப T.V ய அமத்தப்போறியா இல்லையா...பரீட்சையும் அதுவுமா காலங்காத்தால என்ன கூத்துன்னு,உங்கப்பா வந்தா என்னத்தான் முதல்ல கத்துவார்...' என வினோதின் அம்மா T.V யை விட உச்சஸ்தாதியில் கத்தினாள். எதுவும் நடக்காததால் நேராக ஹாலுக்கே வந்தாள். 'இப்போ என்ன தாண்டா நெனச்சிக்கிட்டிருக்க???' கோபமாய் வினோத்தை கேட்டாள்.

' மா..ப்ளீஸ்.. நேத்தே சொன்னேன்ல ... ட்வென்டி ருபீஸ் கொடுங்க.. என் Friends கு ஜீவா பேக்கரில பப்ஸ் வாங்கி கொடுக்கனுமா..இன்னைக்கு Birthday ல...ஏழு மணிக்கெல்லாம் வந்துடுவேன்..அதான் பரிட்ச தான் முடிஞ்சிருமே..போன மாசம் ஸ்ரீ அவன் பொறந்த நாளைக்கு ரோஸ் மில்க் லாம் வாங்கிகொடுத்தான் தெரியுமா...' கெஞ்சலாய் கேட்டான்.

வாசல் திறக்கும் சத்தம் கேட்டது. ராஜ மாணிக்கம் சூ வை கழட்டி விட்டு உள்ளே வந்தார். முகமெல்லாம் வேர்த்திருந்தது. வினோ Chemistry புத்தகத்தை திறந்து வைத்து அமர்ந்திருந்தான். T.V கன நேரத்தில் அணைக்கப்பட்டிருந்தது. ' என்ன வினோத் ...வர வர சத்தம் வாசல் வரைக்கும் கேக்குது...திரும்பவும் பெல்டை எடுக்கனுமா...' வினோத்தை முறைத்துக்கொண்டே சொன்னார்.

வினோத் குனிஞ்ச தலை நிமிரவே இல்லை. 'எல்லாத்தையும் அம்மா நேத்தே சொன்னா... Treat அப்டி இப்டினு தான் மொத ஆரம்பிக்கும்..அப்புறம் அந்த ஸ்ரீதர் பய மாறி தான் நீயும் உருப்படாம போவ பாத்துக்கோ...இன்னைக்கு பிளஸ் 2 கோச்சிங் கிளாஸ் ஆரம்பிக்குதுல ..பரீட்ச முடிஞ்சு சரியா ஆறே காலுக்கு வீட்ல இருக்கணும்...ஊரு சுத்திட்டு லேட்டா வந்தேன்னு தெரிஞ்சது அன்னைக்கு மாறி பெல்ட வச்சு உரிச்செடுத்திடுவேன்' என சொல்லிக்கொண்டே மனைவியிடம் காப்பியை வாங்கிகொண்டார்.

வினோத் கண்கள் தெப்பம் போல் கலங்கி இருந்தது. அழுதாலும் அடி விழும் என்பதால்,அழுகையை அடக்கிக்கொண்டான். நேராய் செருப்பை மாட்டிக்கொண்டு பரீட்சைக்கு கெளம்பினான்.


'ஏங்க பிறந்தநாளும் அதுவுமா அவன இப்டி திட்டுறீங்க..'

' அப்புறம்.. இந்த வயசுல தான் ஒழுக்கம் ரொம்ப முக்கியம்... பாரு அவன் இஷ்டத்துக்கு டிரெஸ் எடுக்கச்சொன்னா ,பிறந்த நாளுக்கு என்ன கலர்ல டிரஸ் எடுத்திருக்கான்... எவனாவுது இப்டி பிறந்த நாளன்னைக்கு கருப்பு சட்டை போட்டுட்டு போவானா...??

******************************************************************************************
மணி சரியாக ஆறே கால் ....
ராஜ மாணிக்கத்தின் வீட்டு வாசலில்
ஆம்புலன்ஸ் சத்தம் கேட்டது.............இவண்
சிவன்

கருத்துகள்

Raju இவ்வாறு கூறியுள்ளார்…
அருமையா எழுதியிருக்கீங்க தல..!
அடிக்கடி இந்தமாதிரி ட்ரை பண்ணுங்க.
ரொம்ப ரொம்ப நல்லாருக்கு.
ஆர்வா இவ்வாறு கூறியுள்ளார்…
பாராட்டப்பட வேண்டிய முயற்சி
ARUN RAMA BALAN இவ்வாறு கூறியுள்ளார்…
Ada super pa...

Keep trying like this..
ரவி இவ்வாறு கூறியுள்ளார்…
அருமையான முயற்சி. !!!
thina இவ்வாறு கூறியுள்ளார்…
கதை நல்லா இருக்கு பாஸ். கொஞ்சம் positive ஆ இருந்துருந்தா இன்னும் super ஆ இருக்கும்.
நாளும் நலமே விளையட்டும் இவ்வாறு கூறியுள்ளார்…
இதுலயும் மூட நம்பிக்கையா?
அய்யா பெரியவங்களே! கருப்பு சட்டை போட்டா இப்படி தான் நடக்குமா ?

தெரியாமல் கூட மூட நம்பிக்கை விதைக்க நினைக்காதீர்.

குறை சொல்ல சொன்னதால் தான்!
Vetrivel இவ்வாறு கூறியுள்ளார்…
முயற்சிக்கு பாராட்டுக்கள்!
இவன் சிவன் இவ்வாறு கூறியுள்ளார்…
வருகைக்கும் ,தங்கள் கருத்துக்கும் மிக்க நன்றி ராஜு...கவிதை காதலன்....
இவன் சிவன் இவ்வாறு கூறியுள்ளார்…
அருண் நன்றி டா...
இவன் சிவன் இவ்வாறு கூறியுள்ளார்…
செந்தழழ் ரவி சாரா அது... மிக்க நன்றிங்க...
இவன் சிவன் இவ்வாறு கூறியுள்ளார்…
// கதை நல்லா இருக்கு பாஸ். கொஞ்சம் positive ஆ இருந்துருந்தா இன்னும் super ஆ இருக்கும்.//

இல்ல தீனா சிறுகதைக்கு நியாய தர்மங்கள் கெடையாது.. அளவைத்தவிர வேற வேற கட்டுப்பாடுகள் கெடயாதுன்னு நம்ம தலைவர் சுஜாதா சொல்லுவார். அதான் இப்டி ஒரு கதை முயற்சி பண்ணேன். வேணும்னா அடுத்து ஒரு சந்தர்பத்தில் கலகலவென முயற்ச்சிக்கிறேன்....
இவன் சிவன் இவ்வாறு கூறியுள்ளார்…
Blogger// நாளும் நலமே விளையட்டும் said...

இதுலயும் மூட நம்பிக்கையா?
அய்யா பெரியவங்களே! கருப்பு சட்டை போட்டா இப்படி தான் நடக்குமா ?

தெரியாமல் கூட மூட நம்பிக்கை விதைக்க நினைக்காதீர்.

குறை சொல்ல சொன்னதால் தான்!//


கண்டிப்பா திருத்திக்குறேன் பாஸ் ... ஆனா உண்மையா சொல்லணும்னா கருப்பு சட்டை அடையாளத்துக்காக கொடுத்தேனே தவிர அபத்ததிற்காக அல்ல...மேலும் கருப்பு சட்டை போட்ட பஸ் மேலே ஏறாதா என்ன??....
இவன் சிவன் இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி வெற்றி..
இவன் சிவன் இவ்வாறு கூறியுள்ளார்…
பாஸ் அப்புறம் யாராவுது அந்த தமிழிஷ், தமிழ்மணம் ஒட்டுப்பட்டை எப்டி இணைக்குறது னு சொன்னீங்கனா நல்லாருக்கும்.. நா L போர்டு அதான்... You can also mail me to ivansivan@gmail.com
நாளும் நலமே விளையட்டும் இவ்வாறு கூறியுள்ளார்…
' அப்புறம்.. இந்த வயசுல தான் ஒழுக்கம் ரொம்ப முக்கியம்... பாரு அவன் இஷ்டத்துக்கு டிரெஸ் எடுக்கச்சொன்னா ,பிறந்த நாளுக்கு என்ன கலர்ல டிரஸ் எடுத்திருக்கான்... எவனாவுது இப்டி பிறந்த நாளன்னைக்கு கருப்பு சட்டை போட்டுட்டு போவானா...??

இந்த வரிகள் இல்லனா, நான் அதை சொல்லத் தேவையில்லை!

ஏங்க? இப்படி தவறுகளை தங்கள் பக்கம் வைத்துகொண்டு விவாதம் செய்வதே பணியா?
சுட்டிக் காட்டுவது ஏற்றுக் கொள்ளத் தக்கதுனா ஏற்றுக் கொள்ளும் இயல்பு எப்ப நமக்கு வரும்?
Gangaram இவ்வாறு கூறியுள்ளார்…
/ஏன்டா வினோ ..எனக்கு 'பான்பராக்' ரவி னு ஒருத்தர தெரியும்...வேணும்னா அவருகிட்ட சொல்லி உங்கப்பாவை தூக்கிருவோமா??' என ஸ்கேலை கழுத்தில் வைத்து நாக்கை துருத்தினான் ஸ்ரீதர்/
--Nice explanation of the Scene.
நல்ல கதைக்கு அழகு வார்த்தையை தெளிவாக தேர்ந்தெடுப்பது தான்... அது நன்றாக அமைசுர்க்க...
உண்மை என்னன்னா.... இந்த கதை படிக்கும் பொது காட்சிகள் வார்த்தைகளால் தெளிவாக தெரிகிறது....
நல்ல முனேற்றம்....

வழக்கம் போல ரேங்க் கார்டு ல போடுற மாதிரி..... கவனம் தேவைன்னு போட மாட்டேன்.... நன்றுனு ...போடுறேன்....
அஹோரி இவ்வாறு கூறியுள்ளார்…
நல்லா இருக்கு.
ராஜ்குமார் பாலகிருஷ்ணன் இவ்வாறு கூறியுள்ளார்…
சிவராஜ் கதை நல்லா இருந்திச்சு..
check this link --> http://blog.tamilish.com/pakkam/5
இவன் சிவன் இவ்வாறு கூறியுள்ளார்…
//ஏங்க? இப்படி தவறுகளை தங்கள் பக்கம் வைத்துகொண்டு விவாதம் செய்வதே பணியா?
சுட்டிக் காட்டுவது ஏற்றுக் கொள்ளத் தக்கதுனா ஏற்றுக் கொள்ளும் இயல்பு எப்ப நமக்கு வரும்?//

நான் தான் பின்னூட்டத்தில ஒருவேளை அது மூட நம்பிக்கைய ஆதரிக்கிற மாதிரி இருந்தா திருத்திக்குறேன்னு சொல்லிட்டேனே தலைவா...
அப்புறம் ஏன் உணர்ச்சிவசபடுறீங்க...உங்கள் கருத்துக்கு ஒத்துப்போவது போல் எனக்கு சில பின்னூட்டங்கள் மேலும் வந்தால் ,நான் அதற்கு வருத்தம் தெரிவித்து
இந்த வலைப்பக்கத்திலேயே பிரசுரிக்குறேன்....தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மீண்டும் நன்றி........
லெமூரியன்... இவ்வாறு கூறியுள்ளார்…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
லெமூரியன்... இவ்வாறு கூறியுள்ளார்…
தமிழ் சினிமாவிற்கு ஒரு புது கதை ஆசிரியர் கிடைசிடாறப்போய்....! :-) :-)
நல்ல இருக்கு சிவா.
இவன் சிவன் இவ்வாறு கூறியுள்ளார்…
லெமூரியன் சார் ...நான் அந்த அளவுக்கு 'Worth' ஆனவன் கிடையாது...
முனைவ்வ்வர் பட்டாபட்டி.... இவ்வாறு கூறியுள்ளார்…
ஆகா.. புது நடை..
கலக்குங்க..

உங்கள் பழைய பதிவுகளை படித்துக்கொண்டுஇருக்கிறேன்..

வந்து ஜாயின் பண்ணிக்கிறேன்..
மங்குனி அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்…
வணக்கம் சார் (பஸ்டு டைம் அதான் )
உஸ்... அப்பா.........
ஒரே நேரத்தில இவ்வளவு படிச்சா டயர்டு ஆகிடுது .
அப்புறம் அந்த NLST கதைல கண்டக்டர் கேரக்டர் தான் நிறைய பேசுது , அத கொஞ்சம் கொறைச்சு இன்னும் பல கேரக்டர்ஸ் பேசி இருந்த இன்னும் கொஞ்சம் பெட்டர் ஆ இருக்கும்கிறது என் எண்ணம் .
அப்புறம் ப.மு.க வுக்கு வந்த அப்ளிகேசன பார்த்தேன் வாழ்த்துக்கள்
இவன் சிவன் இவ்வாறு கூறியுள்ளார்…
//ஆகா.. புது நடை..
கலக்குங்க..

உங்கள் பழைய பதிவுகளை படித்துக்கொண்டுஇருக்கிறேன்..

வந்து ஜாயின் பண்ணிக்கிறேன்..//

தலைவா நீர் வந்து விட்டீரா... வசிஷ்டர் கையால MBA பட்டம் வாங்குன மாறி இருக்கு...தம்பிய அடிக்கடி பாத்துகோங்க....
இவன் சிவன் இவ்வாறு கூறியுள்ளார்…
//வணக்கம் சார் (பஸ்டு டைம் அதான் )
உஸ்... அப்பா.........
ஒரே நேரத்தில இவ்வளவு படிச்சா டயர்டு ஆகிடுது .
அப்புறம் அந்த NLST கதைல கண்டக்டர் கேரக்டர் தான் நிறைய பேசுது , அத கொஞ்சம் கொறைச்சு இன்னும் பல கேரக்டர்ஸ் பேசி இருந்த இன்னும் கொஞ்சம் பெட்டர் ஆ இருக்கும்கிறது என் எண்ணம் .
அப்புறம் ப.மு.க வுக்கு வந்த அப்ளிகேசன பார்த்தேன் வாழ்த்துக்கள்//

பாஸ் வணக்கம்... ஆட்டைல சேத்துகிட்டதிற்கு நன்றி.... உடுங்க அடுத்த கதைல கண்டக்டர ஊமையாக்கிருவோம் ...
முனைவ்வ்வர் பட்டாபட்டி.... இவ்வாறு கூறியுள்ளார்…
சூப்பராயிருக்கு சிவன்..
நல்ல விறுவிறுப்பு..

கலக்குங்க பாஸ்...

( ஆமா..எனக்கு வள்ளுவரைத் தெரியும்.. வால்மீகியத் தெரியும்..
அட..ந்ம்ம பாபா.. நித்தி.. பிரேமானந்தா, போன்ற நவீன கடவுள்களைத் தெரியும்..
யார் இந்த வசிஸ்டருங்க?..சைதாப்பேட்டகாரரா?..)
இவன் சிவன் இவ்வாறு கூறியுள்ளார்…
பட்டா சார் அதிருக்கட்டும்..இன்னிக்கென்ன உங்க பதிவுல எச்சரிக்க மணி அடிச்சிருக்கீங்க....இது தெரியாம நா வேற மொத கமெண்ட போட்டு வச்சுட்டேன்...
முனைவ்வ்வர் பட்டாபட்டி.... இவ்வாறு கூறியுள்ளார்…
@இவன் சிவன் said...

பட்டா சார் அதிருக்கட்டும்..இன்னிக்கென்ன உங்க பதிவுல எச்சரிக்க மணி அடிச்சிருக்கீங்க....இது தெரியாம நா வேற மொத கமெண்ட போட்டு வச்சுட்டேன்...
//


இதெல்லாம் அப்பப்ப நடக்கும்..
கண்டுக்காதீங்க சிவன்..
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
Really good tale.
but., I guess., you are becoming Director Bala.
Please don't.. One Bala is enough for entire Industry.