அனத்தல்கள்


மொட்டைமாடி நட்சத்திரத்தை
எண்ணும் போது
கணித பயம் வருவதில்லை!!


இவ்வளவு இறுக்கமாய் உடை அணிகிறார்கள்
எத்துனை புழுக்கம் எங்களுக்கு !!!
பெயர் முதற்கொண்டு தயார்
இன்னும் பிறக்காத என் மகளுக்கு !!!சிலருக்கு பெரிய ஹோண்டா கார்
சிலருக்கு அழகான காதலி
சிலருக்கு அடுத்த வேலை சோறு ..

தேவைகளிலும் எவ்வளவு பேதம் நம்முள் !!!
கடையில் அவ்வளவு நஷ்டம்
இருந்தும் சிரிக்கிறது
ஜவுளி கடை பொம்மை !!!

பீச்சில் சிலர் காதலிக்கிறார்கள்
குழந்தைகள் மணல் வீடு கட்டுகிறார்கள்
இரண்டுக்கும் பெரிதாய் வித்யாசம் இல்லை...

கருத்துகள்

Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
நண்பா! உங்கள் முதல் ஹைக்கூ மனதை தொடுகிறது!!
"தேவைகளின் பேதமும்" அந்த கடைசி ஹைகூவும் உண்மை சுடுகிறது!!!
இவன் சிவன் இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி ஷ்யாம் ....