கல்லறை கவிதைகள்
 புகைப்படங்களில் அந்த உறைந்த நொடிகளில்
  இன்னும் உயிர் வாழ்கிறார்கள் 
   மரித்துப்போனோர்.

இறந்தவர் கடவுளை அடைகிறாரெனில் 
 இனி வெள்ளிக்கிழமைகளில் 
  கல்லறை செல்வோம்.

இந்தியாவில் ஊருக்குள் கல்லறை 
 ஈழத்தில் கல்லறைக்குள் ஊர்.

வயதான விதவை சாவுக்கு 
 நன்றி சொன்னாள்-இறுதி 
 ஊர்வலத்தில் அவ்வளவு பூவாம்.

பாதி ஆசையில் மறைந்தோரை
 பூமியில் புதைக்காதீர்-இன்னுமா 
  புரியவில்லை பூகம்ப காரணம்.

வேகமாக செல்லும் வண்டிகளில் 
 பயணிகளுடன் சேர்ந்து தானும் 
 ஏறிக்கொ(ல்)ள்கிறது-மரணம்.

இறந்தவுடன் மனிதனுக்கு
 பூமியின் நாற்றம் தாங்கவில்லை 
   மூக்கில் பஞ்சு.

சூடான காபியையே நான் 
 குடிப்பதில்லை என்னையா 
  எரிக்கபோகிறீர்கள்....

பிரியமானவர்களை இழந்தவனே 
 ஆவிகள் நம்பிக்கையை 
  உருவாக்கினான்.

உயர்திரு, திருவாளர் , திரு , திருமதி,
 எல்லாம் 'அது' வாகிப்போகிறார் 
  அந்த நொடியில்...

நல்லா கேட்டுட்டேன் மண்ணுக்கும் தீயுக்கும்
 நம் கண்களும்,உள் உறுப்புக்களும் 
  தேவையில்லையாம்...
  
கருத்துகள்

முனைவர் இரா.குணசீலன் இவ்வாறு கூறியுள்ளார்…
நல்லா கேட்டுட்டேன் மண்ணுக்கும் தீயுக்கும்
நம் கண்களும்,உள் உறுப்புக்களும்
தேவையில்லையாம்...

நறுக்குன்னு கேட்டாலும்..
நல்லாத்தான் கேட்டீங்க..

அருமையான கவிதை நண்பா..
சிந்தனைக்குரியதாக அமைந்தது..

எரித்தால் என்ன?

புதைத்தால் என்ன?

என்ற எனது இன்றைய இடுகையைப் படிக்கத் தங்களை அன்புடன் அழைக்கிறேன்..
முனைவர் இரா.குணசீலன் இவ்வாறு கூறியுள்ளார்…
எரித்தால் என்ன?

புதைத்தால் என்ன?

என்ற எனது இன்றைய இடுகையைப் படிக்கத் தங்களை அன்புடன் அழைக்கிறேன்..
ரசிகன் இவ்வாறு கூறியுள்ளார்…
இந்தியாவில் ஊருக்குள் கல்லறை.
ஈழத்தில் கல்லறைக்குள் ஊர்.

வலிக்கிறது