
மின்னல்
மேகத்தை கசக்கி பூமியில்
கோலம் போட்டார் கடவுள்-மழை
எப்போதும் பெய்தால் "அடை மழை"
எப்போதாவது பெய்வதால்
நமக்கோ இது "அடடே! மழை"
நிழற்க்குடை நிஜமாக உதவியது
ஓடி உள்ளே ஒதுங்கினேன்.
எனக்கு முன் அங்கே அவள்....
மஞ்சள் உடை!
வெள்ளை முகம்!!
கருங்கூந்தல்!!!
அவள் பூமியின் வானவில்!!!!!
மின்னல் வெட்டியது
மழை கலை கட்டியது....
அட நிழற்க்குடை கூட
அவள் மீது சொட்டு சொட்டாக
ஜொள்ளு விடுகிறதே!!!!!
கையை நீட்டி
நீரில் விளையாடினாள்
அது சரி
பூக்களுக்கு நீரை பிடிக்காதா???.....
செல்போன் சிணுசிணுக்க
எடுத்து முணு முணுத்தாள்...
சிரித்து பேசினாள்...
ஒருவேளை காதலனாக
இருப்பா னோ???
அத்தனை மழையிலும்
எடுத்து முணு முணுத்தாள்...
சிரித்து பேசினாள்...
ஒருவேளை காதலனாக
இருப்பா னோ???
அத்தனை மழையிலும்
எனக்கு அடி வயிற்றில் எரிச்சல்.........
யாரோ மழையில்
வழுக்கி விழ....
இவள் குலுங்கி சிரித்தாள்...
மின்னல் மேலே
வெளிச்சம் கீழே.....
அவள் சிரிப்பை மீண்டும் பார்க்க
நானும் விழழாமா என யோசித்தேன்...
யாரோ மழையில்
வழுக்கி விழ....
இவள் குலுங்கி சிரித்தாள்...
மின்னல் மேலே
வெளிச்சம் கீழே.....
அவள் சிரிப்பை மீண்டும் பார்க்க
நானும் விழழாமா என யோசித்தேன்...
அவள் அழகு அழைத்தது எனினும்
என் அறிவு தடுத்தது......
எதாவது பேசுவோம்
என எதார்த்தமாய் யோசித்தேன்....
என்ன பேச
எப்படி ஆரம்பிக்க
என
என் இமயமலை ஆசையில்
இடியாப்ப குழப்பங்கள்....
மழை விட்டது
மழை விட்டது
என் மனதும் விட்டது......
ஆட்டோ வந்தது
ஆசையில் அணுகுண்டு போட்டது!!!!
ஆட்டோ வந்தது
ஆசையில் அணுகுண்டு போட்டது!!!!
அவள் வாகனத்தில் ஏறி மறைய,
நான் சிதறி உடைந்தேன்...
வண்டியை விரட்டலாம் என
தமிழ் சினிமா அறிவு தடாலென யோசித்தது....
தமிழ் சினிமா அறிவு தடாலென யோசித்தது....
கால்கள் பரபரக்க
காலடி வைத்தேன்...
அந்த ஆட்டோவின் பின்னால்
"சுடிதாரை தொடராதே.....
அந்த ஆட்டோவின் பின்னால்
"சுடிதாரை தொடராதே.....
சுடுகாட்டை அடைவாய்!!!!"
இப்போது மீண்டும் மின்னல்
வெளிச்சம் என் மூளையில்.....
இப்போது மீண்டும் மின்னல்
வெளிச்சம் என் மூளையில்.....
கருத்துகள்
I know i will be the first person to give the comment on this blog... I hope very soon others also will give comments.
\\அட நிழற்க்குடை கூட
அவள் மீது சொட்டு சொட்டாக
ஜொள்ளு விடுகிறதே!!!!! //
ரசனையான வரிகள் :-)
\\ஒருவேளை காதலனாக
இருப்பா னோ???
அத்தனை மழையிலும்
எனக்கு அடி வயிற்றில் எரிச்சல்........//
கண்டிப்பாக ஒரு வித ஏக்கம் வந்து செல்லும் . :-)
\\அந்த ஆட்டோவின் பின்னால்
"சுடிதாரை தொடராதே.....
சுடுகாட்டை அடைவாய்!!!!"
இப்போது மீண்டும் மின்னல்
வெளிச்சம் என் மூளையில்.....//
இதுதான் இந்தக் கவிதையில் highlight'e..........பட்டையைக் கெளப்புறீங்க....!
great one.. i enjoyed it...keep writing n somelines says my days..old days..greta dude..