CAST AWAY(2000)


Tom Hanks நடிப்பில் 2000ல் வெளிவந்து அனைவரின் நெஞ்சத்தையும் கொள்ளை கொண்ட படம் இது.ஏற்கனவே இயக்குனர் "Robert Zemeckis"சுடன் சேர்ந்து 'forrestgump' யில் கலக்கிய hanks, நடிப்பில் சிகரம் தொட்ட படம் இது என்றால் மிகையாகாது.

இந்த பதிவை படிக்க நேரும் எல்லோரும் இந்த படத்தை பார்த்திருக்கும் சாத்தியங்கள் அதிகம் என்றாலும், திரும்ப திரும்ப பார்க்க சலிக்காத படங்களில் இதுவும் ஒன்று என அனைவரும் ஒத்து கொள்வார்கள் என்றே நம்புகிறேன்.

"FEDEX" shipping நிறுவனத்தில் பணிபுரியும் Chuck Noland(Tom Hanks) ஒரு விபத்தில் தனியொரு தீவில் மாட்டிக்கொள்வதே படத்தின் மையக்கதை. துரு துருவென திரியும் Hanks தீவில் மாட்டிக்கொண்டு படும் அவஸ்தை ஆரம்பத்தில் சிரிப்பாக தெரிந்தாலும் போக போக நம்மை கலங்க வைத்து விடும்.அதுவும் அந்த நெருப்பை வரவைக்க அவர் படும் அவஸ்தை விவரிக்க முடியாத ஹைக்கூ.


படத்தில் அந்த தீவு காட்சிகளில் வசனமே அதிகம் இருக்காது.பின்னணியில் வெறும் கடல் அலை சத்தம் மட்டுமே. பேச்சுத்துணைக்கு ஆளில்லாமல் வாலிபாலுக்கு 'wilson' என பெயரிட்டு பேசுவது, குகைக்குள் காலண்டர் போட்டு வைப்பது போன்ற காட்சிகள் தனிமை பயத்தை நமக்கும் தரும்.

ஒரு மனுஷன் இப்படியெல்லாம் நடிக்க முடியுமான்னு "TomHanks" நடிப்ப பாக்கிறபோது எண்ணம் வரும். அதுவும் அந்த தீவு காட்சிகளுக்காக 40 பவுண்ட் (20 KG) எடை குறைந்தாராம்(ஒரு வேலை சொந்த படம் என்பதாலோ!!!)

ஊருக்கு திரும்பி வரும் Hanks சிற்கு நடக்கும் சம்பவங்களை பார்க்கையில் நமக்கு ஆங்கிலம் தெரியவில்லை எனினும் அழுகை முட்டிக்கொண்டு வரும். கடைசியில் இப்போதும் இவன் தனி தீவில் தான் இருக்கிறான் என்பது போல முடிவது கவிதை.இந்த படம் பார்த்த பிறகு TomHanks படங்களை விரட்டி விரட்டி பார்த்ததெல்லாம் தனிக்கதை.



இயக்குனர் Robert Zemeckis மற்றும் நம்ம TomHanks


Gladiator படத்திற்காக russel crowe விற்கு 2000ம் ஆண்டிற்க்கான ஆஸ்கார் கிடைத்தது. எனக்கென்னமோ அது நம்ம hanksசிற்கு தரப்பட்டிருக்க வேண்டியது என்றே தோன்றுகிறது .

கருத்துகள்

அஹோரி இவ்வாறு கூறியுள்ளார்…
உண்மைதான். கலக்கலான நடிப்பு.
இவன் சிவன் இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி அகோரி....(பேரே கொஞ்சம் மிரட்டலா இருக்கே..)
லெமூரியன்... இவ்வாறு கூறியுள்ளார்…
இந்த திரைப் படத்தை நான் என்ever green collections folderil வைத்திருக்கிறேன்.....கண்டிப்பாக இது all time favourite movie.