
நம்மளயெல்லாம் onsite அனுப்புறதே அதிகம்னாலும்,மும்பை ஏர்போர்ட்ல நாலு மணி நேரம் வெயிட் பண்றதெல்லாம் கொஞ்சம் அதிகம் தான் . அதுவும், கூட வந்த ரெண்டு பேருமே ஹிந்தி கார பசங்க, சலபுலசலபுலனு ஹிந்தில பேசிகிட்டே வந்தானுங்க. நமக்கு வேற ஹிந்தி "Maalum Nahee" ங்கறதால எதோ தூர்தர்சன் பார்குற மாதிரியே இருந்துச்சு. சரி flight நாலு மணிக்கு தானே இப்போ ரெண்டு மணி தான் ஆகுதே ஒரு தூக்கத்த போடலாம்னு பாத்தா, பஸ்ஸை மிஸ் பண்ண பழைய சம்பவங்கள் ஞாபகம் வந்து தொலைச்சது.
அங்கங்க அவன காணோம் ,இவன் வரலேன்னு மைக்ல கூவிட்டு இருந்தாங்க. அந்த நேரம் பாத்து நமக்கு அடுத்த சீட்ல VIP சூட்கேசோட ஒரு முரட்டு ஆளு வந்து உட்காந்தார். அவரு பார்க்காதப்ப நான் அவர பார்ப்பேன் ,அவரு என்னை பார்த்தா மூக்க சொறிஞ்சிக்கிட்டே எதார்த்தமா வேற பக்கம் பாப்பேன். அதையே அவரும் செய்தார். ஆளு ஒரு மார்க்கமா இருந்தாரு,எதோ செய்ய போற மாதிரியே முழிச்சிகிட்டு இருந்தாரு. கொஞ்ச நேரத்துல ஏர்போர்ட் ஆளுங்க வந்து அவரு கிட்ட எதுவோ ஹிந்தி ல கேக்க,அவரு வேற எதோ மொழில (கன்னடம் னு நெனைக்குறேன் ) பதில் சொல்லிட்டு இருந்தார். இவருக்கு englishசும் பிரச்சனையா இருந்ததால கைல இருக்கிற டிக்கெட்ட உருகி பாத்தாங்க.பிறகு ரொம்ப கடுப்பாகி அந்த ஆள ஹிந்தில கத்த ஆரம்பிசிட்டாங்க.
பக்கத்துல உட்காந்திருந்த ஒரு german தாத்தா என்கிட்டே ரொம்ப ஆர்வமா what happened?? அப்டினார். எனக்கும் சத்தியமா புரியலய்யா னு சொல்றதுக்கு பதிலா உதட்டை பிதுக்கினேன். கடைசி பாத்தா அந்த ஆளுக்காக ரியாத் போற AirIndia flight அரை மணி நேரமா வெயிட் பண்ணிட்டு இருந்திருக்கு. பய புள்ள இங்க உட்காந்து நம்மள பயமூர்த்திட்டு இருந்திருக்கு!!! ஒருவழியா அவர பேக்-அப் பண்ணி கூட்டு போய்ட்டாங்க.

தெரிஞ்ச மூஞ்சு ஒன்னு கண்ணுல தென்பட்டுச்சு ,யாருன்னு பாத்தா நம்ம இலங்கை கிரிக்கெட் வீரர் அஜந்தா மென்டிஸ். இந்த 'carom ball' லாம் போட்டு கொஞ்ச காலம் இந்தியாவை டரியல் ஆக்குனரே அவரே தான்.மனுஷன் வெள்ளை டி ஷர்ட்,ஜீன்ஸ்ல ஒரு "trolly" சூட்கேசை தர தரனு இழுத்திட்டு போயிட்டு இருந்தார். அவர அங்க ஒரு பய கண்டுக்கல, நா விடாம வெரட்டி ஓடி போயி கை குடுத்து ,ஒரு ஆட்டோகிராப் வாங்கிட்டேன். யார்கூடயோ போன்ல பேசிட்டே இருந்தாரு. கையெழுத்த பாத்தேன் ,தமிழ் சினிமா ஹோஸ்பிட்டல் சீன்ல சீஸ்
மோக்ராப் காட்டுவாங்களே அது மாறி இருந்துச்சு.சிங்களம்னு நெனைக்குறேன்.
ஒரு வழியா நம்ம flight டுக்குரிய அறிவிப்பு வந்தது. சும்மா சுத்தி சுத்தி செக் பண்ணாங்க. நான் அந்த அளவுக்கு 'Worth' இல்லீங்கன்னு சொல்லலாம்னு பாத்தேன்,கைல துப்பாக்கி இருந்ததால் அமைதி காத்தேன்.தேடி கண்டுபிடிச்சு நானும் ,அபிசேக்கும் சீட்டில செட்டில் ஆனோம். முன்னாடி நின்னு ஒரு பொண்ணு flight கடலுல பார்க் ஆயிருச்சுனா என்னென்ன செய்ய வேண்டும்னு செய்து காண்பித்தாள். அந்த life jacket உபயோக படுத்தும் முறையை நடித்து காட்டினாள்.எனக்கு அத்தனை A.C யிலும் ஏனோ வேர்த்தது. ஒரு நிமிஷம் டைட்டானிக் படம்லாம் ஞாபகம் வந்து போனது. பொதுவா flight டேக் ஆப் ஆகுறப்போ " வயித்தில பட்டாம்பூச்சி பறக்கும்" னு சொல்லுவாங்க. எனக்கு "பாரசூட்டே பறந்தது". பத்து நிமிஷம் கழிச்சு நம்ம அபிசேக்கு என் கையை சுரண்டினான். என்னனு பாத்தா எங்களுக்கு அடுத்த வரிசைல டிபன் மற்றும் சரக்கு சப்ளை செய்யப்பட்டுக்கொண்டிருந்தது.அதுவும் அந்த Air-Hostress , நம்ம திரிஷா அப்டியே கேட் வின்ச்லேட் கலர்ல இருந்தா எப்டி இருக்கும்.அப்டி இருந்தது.நம்ம பய மூஞ்சுல முன்னூறு வாட்ஸ் வெளிச்சம் வந்துச்சு. எங்க வரிசைல யார் வருவான்னு ஆர்வமா பாத்தா சரோஜா தேவி மாதிரி ஒரு அம்மா வந்திச்சு. உங்க மனக்கண்ணுல அன்பே வா சரோஜா தேவி வந்தா அத அழிச்சிருங்க, இது ஆதவன் சரோஜா தேவி. நியாயமாபாத்தா அந்தம்மா retire ஆயிருக்கனும். நா ஒரு கோக் மட்டும் குடிக்க (நம்புங்க!!!) நம்ம பய whishky ஒரு பெக் அடிச்சிட்டு மட்டயாகிட்டான்.

பின்னாடி ஒரு குழந்தை தன்னோட முழு பலத்தையும் திரட்டி அழ ஆரம்பிச்சது, எந்த ஊரு குழந்தை அழுதாலும் காது கிழிய தான் செய்கிறது. அவுங்க அம்மாவோட ஆறுதலை விட சக பிரயாணிகளின் பிரார்த்தனையே அந்த குழந்தையை தூங்க வச்சிருக்கும்னு நெனைக்குறேன். கைல வச்சிருக்கிற "3 point some one" புத்தகத்தையும் ,டி.வி யையும் எவ்வளவு நேரந்தான் மேயுறது. கடைசியா சாயங்காலம் 4 மணிக்கு Atlanta வந்திறங்கினோம். எங்க பெட்டி,படுக்கைகளெல்லாம் எடுத்துக்கிட்டு Taxi யை கூப்புட்டோம்.
அங்க இருந்து கைல வச்சிருக்க அட்ரஸ் எவ்வளவு தூரம்னு எங்களுக்கும் தெரியாது. டாக்ஸி டிரைவர் 80 டாலர் கேட்டான், நாங்களும்
ரொம்ப தெரிஞ்சவைங்க மாதிரி இங்க இருக்கிற ஹோட்டலுக்கு இவ்வளவானு கேட்டு பேரம் பேசுனோம். பத்து நிமிஷ பேச்சு வார்த்தை முடிவில 60 டாலருக்கு ஒத்துக்கிட்டான்.பாவம் அந்த ஆளுக்கு வேர்த்துப்போச்சு. ஹோட்டல்ல போயி இறங்குனவுடனே அங்கேயே இருக்கிற எங்க அலுவலக நண்பர் ," Taxi க்கு 90 டாலர் வாங்கிருப்பானே??" னு கேட்டார். நான் அவர் காது பக்கத்துல போய் 60 டாலர் னு சொன்னேன். கடைசி கிளம்புறப்ப அந்த டிரைவர் நம்ம அபிசேக்கு கிட்ட "Sir Tips??" அப்டினார். நம்ம பய 45 ஆள பெருக்கிப்பாத்து ஒரு டாலர் நோட்ட நீட்டி ரொம்ப பெருமையா பார்த்தான்.அவன் அதை விடுக்குனு வாங்கிட்டு எதோ சத்தமா முனங்கிகிட்டே போனான். கண்டிப்பா கெட்ட வார்த்தையாத்தான் இருக்கும்.
கருத்துகள்
Keep writing da...
(Appo than nanlam blog pakkam poga matten... ha ha ha)