சாதம்


--
the white rice


我们的团体有一位主席,两位副主席 体有一位主席

மேலே இருக்கும் சொற்றொடரை பார்த்து தலை சொரிகிறீர்களா?? இதைப் போலவே சமையல் என்பது எனக்கு இன்றுவரை புரியாத மொழி. யாராவது என்னிடம் வந்து சாம்பாரில் என்னென்ன மூலப்பொருட்கள் உள்ளது என எழுது அல்லது மூன்றாவது மாடியில் இருந்து குதி எனச்சொன்னால் நான் பின்னதையே தேர்ந்தெடுப்பேன். எனக்கு ருசி சார்ந்த விசயங்களிலும் ஞானம் போதாது தான் .ஏன்.. ரொம்ப நாள் வரை காபிக்கும் டீக்கும் வித்யாசம் கண்டுபிடிக்க தெரியாது,இவனுக்கு நாக்கு என்று ஒன்று உள்ளதா என நண்பர்கள் பல நேரங்களில் சந்தேகிப்பார்கள்.சமையலில் இருந்து இது வரை தப்பி வந்தாலும் ,காலம் இப்போது கையில் கட்டையுடன் 'இப்ப என்ன செய்யுவே??' என என்னைப்பார்த்து வக்கணம் காட்டுகிறது. வேறு வழியே இல்லாத நிலையில் சமைக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கிறேன்.

நாமெல்லாம் ஒன்னா சமைச்சு சாப்பிடுவோமா?? என ஒரே தளத்தில் தங்கியிருக்கும் அலுவலக நண்பர்கள் கேட்டவுடன் முதலில் தலையாட்டியவன்நான் தான். இவன் ரொம்ப ஒற்றுமையான பையனா இருக்கானே எனஎன்னைபார்த்து பலர் பூரித்தனர். பாவம் அவர்களுக்கு நம் வண்ட வாளம்அப்போது தெரிந்திருக்கவில்லை.இங்கே இந்த அகில இந்திய சமையல்கூட்டணியில் இருப்பவர்களை விளக்க வேண்டியது அவசியமாகிறது . முதலாமவர் ஜஸ்வீந்தர் சிங்,இவர் எங்க எல்லாருக்கும் பெரியவர். பாத்ரூம்போவதை தவிர மற்ற அனைத்து விசயங்களையும் இவரை கேட்டுத்தான்செய்வோம்.அடி வயிற்றில் இருந்து தான் பேசுவார். எது ஹிந்தியில் பேசினாலும்ஒருமுறை எனக்காக ஆங்கிலத்தில் சொல்வார். முக்கியமாய் எங்கள் கழகத்தில்கார் வைத்திருக்கும் ஒரே உறுப்பினர் இவர் தான். அடுத்து அபிஷேக் , பழையஹிந்தி ஹீரோ மாறி வாட்ட சாட்டமா இருப்பான். பிராமின பையனாஇருந்தாலும் சிக்கன், மட்டன்,மீன்னு சமைச்சு கொடுக்கும் எங்க குழுவின் கவுச்சிநாயகன்.கடைசியா பியுஷ்- ஒரியா கார ஆளு. மனுஷன் செத்து போயிட்டானானுபயப்புடுற அளவுக்கு மரணத்தூக்கம்
தூங்குவான்.இப்போதைக்கு எனக்கு ஹிந்திகெட்ட வார்த்தைகள் கற்று தரும் புனிதர் இவர் தான்.

முதல் ரெண்டு நாள் எல்லாம் நல்லா தான் போய்ட்டு இருந்தது. நானும் அப்படிஇப்படி பாத்திரம் கழுவி ஓட்டிட்டேன்.நம்ம ஜஸ்வீந்தர் தான் சும்மா இல்லாமமூணாவது நாள் ஆரம்பிச்சார். 'பாவம், நீங்களே எல்லாத்தையும் clean பண்றீங்களே...இன்னைக்கு நான் பண்றேன்... நீங்க வேணும்னா சாதம்பண்ணிடுங்க' அப்டினார். எனக்கு நல்லது பண்ணுவதாய் நினைத்து எங்கள்குழுவுக்கே குழி தோண்டினார்.'இல்ல இருக்கட்டும்' னு நான் சமாளிக்கிறதுக்குள்ள கையில குக்கரை திணிச்சிட்டாங்க.எனக்கு ஒரு மண்ணும் தெரியாது என சொல்ல மீசைஉறுத்தியது.சரி ஒரு கை பாத்திருவோமேனு வைராக்கியமாய் குக்கருடன் என்அறைக்கு நடக்க ஆரம்பித்தேன். உள்ளே மிளகாய்,தக்காளியெல்லாம் போட்டுசிக்கன் சமைத்துக்கொண்டிருந்த பியுஷ், 'இந்த குழம்புக்கு சாதம் வைச்சுசாப்பிட்டோம்னா செம்மையா இருக்கும் டா..எனக்கு இப்பவே பசிக்குது..' எனகண்கள் விரிய சொல்லிக்கொண்டிருந்தான்.எனக்கு ஏனோ அவனை பார்க்கபாவமாய் இருந்தது.

என்
அறைக்குள் வந்தவுடன் குக்கரை திறக்க முற்பட்டேன்.ஒரு மாதிரி சாய்த்துக்கொண்டு மூடியை எடுக்கும் அந்த சூத்திரம் புரிபடவில்லை. இரண்டுநிமிட கடும் போராட்டத்திற்குபின் வெற்றி கண்டேன். யாரோ கண்டபடி சிரிக்கும்சத்தம் கேட்டது. கண்டிப்பாய் என் மனசாட்சியாய் தான் இருக்கும். நாலுபேருக்குசாதம் வைக்க எவ்வளவு அரிசியை போட வேண்டும்?? எவ்வளவு தண்ணி ஊற்றவேண்டும் ??எவ்வளவு நேரத்தில் எடுக்க வேண்டும் ?? என கேள்விகள் மட்டுமே என் வசம்இருந்தது. வீட்டுக்கு தொலைபேசி விவரம் கேட்கலாமா என யோசித்தேன். அவர்கள் விஷயத்தை ஊரெல்லாம் பரப்பி, சன் சிறப்பு பார்வை வரை போய்விடும்அபாயம் இருப்பதால் அதை தவிர்த்தேன்.கூகிளில் தேடலாமா என என் மென்பொருள் அறிவு மேலோங்கியது.இருப்பினும்எல்லாத்தையும் விடுத்து நால்வருக்கு நாலு கப் அரிசி என சுயேட்சையாய் முடிவுசெய்தேன். சாதம் சரியாய் முங்கும் அளவு தண்ணீர் ஊற்றினேன். அடுப்பில்குக்கரை வைத்தேன். இரண்டு விசிலுக்கு பிறகு எடுக்கலாம்னு கணித்தேன் . இனிபிரச்சனை இல்ல என அந்த சத்தத்திற்காக காத்திருந்தேன். சம்பந்தமேஇல்லாமல் திடீரென என் நினைவடுக்குகளில் இருந்த அந்த பழைய சம்பவம்ஞாபகம் வந்து தொலைத்தது.

நான்
தொடக்க பள்ளியில் படித்துக்கொண்டிருந்த ஏதோ ஒரு ஞாயிற்றுக்கிழமைஇரவு அது. என் வீட்டிற்கு வெளியே தோழர்களுடன் இனிமையாய் 'கல்லாமண்ணா??' என்ற அன்றைய கால பிரசத்தி பெற்ற விளையாட்டுவிளையாடிக்கொண்டிருந்தேன்.அம்மா காஸ் ஸ்டவில் எதோ வைத்து விட்டுஎன்னிடம் வந்து ,'நான் பக்கத்துல காய் வாங்கிட்டு வந்துடறேன், அடுப்பமறக்காம அஞ்சு நிமிஷத்துல அமத்திடு...' அப்படினு மூணு தடவ சொன்னாங்க. இது இப்ப நல்லா ஞாபகம் இருக்கு ஆனா அப்போ வழக்கம் போல மறந்துவிளையாட்டுல தீவிரம் ஆகிட்டேன். நாப்பது நிமிஷம் கழிச்சி அம்மா வந்துஎன்னடா சரியா அடுப்ப அணைச்சிடேலே?? என கேட்க நான் பயந்து போய்முழித்தேன். வீட்டினுள் பாத்திரம் விழும் சத்தம் கேட்டது.எனக்கு முன் அம்மாவீட்டுக்குள் ஓடினாங்க. மூஞ்ச சோகமா வச்சிக்கிட்டு ரெண்டு நிமிஷம் கழிச்சுநான் உள்ளே போனேன். எங்க பக்கத்து வீட்டு பெண்கள் எல்லாமே வீட்டுக்குள்தான் இருந்தாங்க. நல்ல வேளை அது நடக்கல , இது நடக்கல என நடக்காதசம்பவங்களை சொல்லி அம்மாவை வெறி ஏற்றி கொண்டிருந்தார்கள். அடுப்பங்கரை முழுக்க சாதம், காய்கறிகள் சிதறிக்கிடந்தன. கூட்டமெல்லாம்போனப்புறம் மரண அடி விழுகும் என எண்ணிகொண்டேன். அம்மா என்னைருத்ரமாய் பாத்தாங்க.பக்கத்துல இருந்த அடுத்த வீட்டுஹேமாக்கா(ஹேமா+அக்கா) ,'பிள்ளைய அடிச்சுராதடீ' னு சொல்ல அப்போதுவரை அடிக்கிற ஐடியாலயே இல்லாத அம்மா ஆவேசமாய் என் தலையில் இடியென ஒரு கொட்டு வச்சாங்க. அந்த கொட்டுக்கு நியாமாய் நான் பூமியில் புதைந்திருக்க வேண்டும், நல்ல காலம்சிமெண்ட் தரை என்பதால் அது நடந்தேறவில்லை. மறுபடியும் ஹேமாக்காஐயோ தலைப்பிள்ளைய தலைலே அடிக்காதம்மா' என சொல்ல அம்மா என்கன்னத்தை பதம் பார்த்தாங்க. இதற்கு மேலும் அமைதி காத்தால்ஹேமாக்காவால் எனக்கு சேதம் அதிகம் ஆகும் என்பதால் அழுது அந்தகாட்சியை முடித்தேன்.

Flashback over.நிகழ் காலத்துக்கு வருவோம். கிட்டத்தட்ட 45 நிமிஷம் வரைகுக்கரிலிருந்து எந்த ஒரு விசில் சத்தமும் வரவே இல்லை. குக்கருக்குதொண்டை கட்டியிருக்குமோன்ற மொக்கையெல்லாம் அந்த சூழ்நிலையிலதோணல. கொஞ்சம் கருகல் வாடை வந்ததால் அடுப்பை அணைத்தேன். விசிலைதூக்கி பார்த்தால் ஆவியே வரவில்லை. ஒரு வேளை இந்த ஊரில்ஆவியெல்லாம் வராது போல என எனக்குள் சொல்லிக்கொண்டு குக்கரைதிறந்தேன். பயத்துடன் உள்ளே பார்த்தால் ,சாதம் கருகிப்போய் கருப்பு நிறத்தில் இருந்தது. உண்மையா சொல்லணும்னா அரிசிய சமைக்குறதுக்கு பதிலா வறுத்திருக்கிறேன்.இந்த மாதிரி எதாவுது நடக்கும்ங்கறது நான் எதிர்பாத்தது தான்னாலும், இந்த அளவுக்கு போகும்னு நான் எதிர் பார்க்கல. பக்கத்து ரூம்ல இருந்து அபிஷேக் இண்டர்காம்ல கூப்பிட்டான். ,' சிவா.. வேகமா சாதத்தை எடுத்துட்டு வா..எல்லாருக்கும் ஒரே பசி' என ஆர்வமாய் பேசினான். எல்லாரும் என் ரூமுக்கு வாங்க ஒரு சின்ன பிரிச்சனையாயிடிச்சுனு சொல்லி phone ஐ வைத்தேன். எல்லாரும் வந்து பார்த்து அதிர்ச்சியில் உறைந்தே போயினர். நான் எதுவும் விளக்க தேவையிருக்கவில்லை. ஏற்கனவே பசியில் நொந்து போயிருந்த பியுஷ் வயிற்றை பிடித்துக்கொண்டு சோபாவில் உட்காந்து விட்டான். அபிஷேக் குக்கரை பார்த்து பார்த்து சிரித்து கொண்டிருந்தான். எனக்கும் சிரிப்பு வந்தாலும் சூழ்நிலை கருதி அடக்கிகொண்டேன். கடைசி நம்ம ஜஸ்விந்தர் தான் மௌனத்தை கலைத்து ,' சரி விடுங்க நல்ல வேலையா சப்பாத்தி மாவு இருக்கு ரெண்டு நிமிஷத்துல ரெடி பண்ணிடலாம் ' அப்டினார். 'ஆமா சப்பாத்தி உடம்புக்கும் நல்லது' னு நான் சொல்ல ,எல்லோரும் என்னை கர்ண கொடூரமாய் முறைத்தனர்.



கருத்துகள்

Anisha Yunus இவ்வாறு கூறியுள்ளார்…
ஆஹா... உங்க நடுனிசி நாய்கள் கதையை தொடர்ந்து இங்கே வந்துட்டேன். பரவால்ல. ஒரியாக்காரருக்கு (என் வீட்டுக்காரருக்கு) ஒரு competitor இருக்காரு சமையல்ல... அதுக்கப்புறம் மறுபடியும் சமையல்கட்டு பக்கம் போகலியா??
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
I really dont know hw I missed ur blog for all these days. Nagaichuvai ungalukku miga iyalbaai varugiradhu. Manam vittu sirithaen Keep it up...
-Priya