எந்திரன் - சன் திரைவிமர்சனம்








வணக்கம். இது உங்கள் சன் திரை விமர்சனம். இந்த வாரம் நாம பார்க்க போற படம் சங்கர் இயக்கி, சூப்பர் ஸ்டார் நடிக்க, சன் பிக்சர்ஸ் கலாநிதிமாறன் பெத்த பெருமையுடன் வழங்கும் 'எந்திரன்'. வெளியாவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே நமது சன் டாப்-டென்னில் இந்த படம் முதல் இடத்திலிருந்தது குறுப்பிடத்தக்கது. மிகுந்த எதிர்பார்ப்பிற்கிடையே வெளியாகி இந்த படம் தியேட்டர்களை திருவிழா கூட்டங்களாக்கி கொண்டிருக்கிறது. குறிப்பா இது தமிழ் சினிமாவை அடுத்த வட்டத்திற்கு ...மன்னிக்கணும் அடுத்த கட்டத்திற்கு அலேக்கா தூக்கிட்டு போயிருக்குனு சொன்னா அது மிகையாகாது.

வெளியான முதல் வாரத்திலேயே இது வரை வெளியான எல்லா இந்திய படங்களின் வசூல் சாதனையையும் இந்த படம் 'டம்,டும்' னு அடிச்சி உடைச்சிடுச்சு. இந்தியால டிக்கெட் கிடைக்காம சில ரசிகர்கள்
அமெரிக்காவுக்கு பறந்து போய் படம் பார்த்ததா நமது செய்திக்குறிப்பு ஒன்று தெரிவிக்கிறது. சில ரசிகர்கள் பெட்டி படுக்கையுடன் வந்து தியேட்டரிலேயே தங்கி அனைத்து காட்சியையும் பார்ப்பது இந்திய சரித்திரத்திலேயே இதுவே முதன் முறை. இப்போ நாம படத்தோட விமர்சனத்துக்கு போவோம்.

வசீகரன் ஒரு விஞ்ஞானி. (a+b)^2 க்கு அப்புறம் ஒரு நல்ல formula வரவே இல்லேன்னு தீவிரமா ஆராய்ச்சி பண்றார். தாடியைதவிர வேறேதும் அந்த ஆராய்ச்சியின் போது வளர்ந்ததா தெரியல. இறுதில 'டோகாமா' என்கிற ஒரு டெக்னாலஜிய கண்டுபிடிக்கிறார். அத ஒரு எந்திரத்துக்கு செலுத்துகிறார். அதனுடைய மூளை மனித மூளைய விட மூவாயிரம் மடங்கு வேகமா செயல் படக்கூடியது. அது ரெண்டாயிரம் யானையின் பலம் கொண்டது. ஆனால் சாணி போடாது. அந்த 'எந்திரனுக்கு' சிட்டினு பெயரிடுகிறார் வசீகரன். பின்பு வரிவிலக்குகாக 'அறிவுநிதி' எனப்பெயரை மாற்றுகிறார். சென்னையில்
டாட்டா சுமோவில் கூட்டமாய் போய் வில்லத்தனம் செய்கிறார் மந்திரி 'முண்டக்கலப்பை'. அவர் தன்னுடைய தம்பியை +2 வில் பாஸாக்க எந்திரனை உபயோகிக்க பார்க்கிறார். இதற்கிடையில அது ஒரு இயந்திரம்ங்கிறது தெரியாம 'எந்திரனை' கன்னா பின்னானு காதலிக்கிறார் ஐஸ்வர்யாராய். கடைசியில காதலையும், கலகத்தையும் எப்படி சமாளிக்கிறான்கிறதை அதிரடியா சொல்லிருக்கார் இயக்குனர் சங்கர். Hollywood க்கு சவால் விடுற மாறி அமைஞ்சிருக்கு அந்த கிளைமாக்ஸ் காட்சி. இப்படி ஒரு படம் இனிமே எடுக்கவே முடியாதுன்னு சினிமா வல்லுனர்கள் துண்டைப்போட்டு தாண்டுகிறார்கள்.


இவை எல்லாத்துக்கு மேலாக உலக திரைப்பட வரலாற்றிலேயே முதல் முறையா ஒரு முயற்சியை சன் குழுமம் செய்திருக்கிறது. திரையரங்குகளில் படத்தின் போது இரண்டு காட்சிகளுக்கு ஒருமுறை, 'இந்த காட்சியை வழங்குவோர்' என விளம்பரங்கள் போடுவது மிகப்புதுமை. இது வர்த்தகத்தின் பல வாசல்களை திறக்கிறது. படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் புதுமை கொப்பளிக்கிறது. சூப்பர் ஸ்டார் மிக இளமையாய் காட்சி தருகிறார். இவர் பக்கத்தில் நிற்கையில் ஐஸ்வர்யா கொஞ்சம் வயசானவராய் தெரிவதை மறுக்க முடியவில்லை. 'நா பேசினா டெசிபல்... நீ ராங்கா பேசினா எகிறும் உன்பல்லு' னு
பஞ்ச் பேசுவதாகட்டும், 'ரிங்கா ரிங்கா ரோசஸ்' னு காமெடி பண்ணுவதாகட்டும் , 'எனக்கு ஜுரம்,இருந்தும் 'ஐஸ்' ஸ பிடிக்குது' னு காதல் புரிவதாகட்டும் சூப்பர் ஸ்டார் பின்னியெடுக்கிறார். இறுதில இந்தியாவில் இருந்து கொண்டே இங்கிலாந்து பிரதமர் வீட்டில் இருக்கும் வெடிகுண்டை கண்டுபிடிக்கும் காட்சி மிக அபாரமாய் படமாக்க பட்டிருக்கிறது.ஓவ்வொரு காட்சியிலும் சங்கரின் உழைப்பு தெரிகிறது அதுதானா என்னவோ தியேட்டரில் ஒரே வியர்வை வாடை!!


ரஜினி ஐஸ்வர்யா ஆடும் டூயட் தவிர படத்தில் வேறு இடங்களிலும் நகைச்சுவை இருக்கிறது. அருமையான நகைச்சுவைக்கு சந்தானமும், கருணாசும் உத்தரவாதம் தராங்க. சந்தானம் அடிக்கும் இரட்டைஅர்த்த நகைச்சுவையை குடும்பமாக ரசிகர்கள் ரசிப்பதை காண முடிகிறது. வில்லனாக வரும் 'முண்டக்கலப்பை' கண்ணாலேயே அனைவரையும் மிரட்டிவிடுகிறார். அவர் டாட்டா சுமோவில் கூட்டமாய் வருவது புதுமை. 'அரிமா அரிமா' பாடல் பிரம்மாண்டத்தின் உச்சம். அந்த பாடலில் ஆயிரம் எந்திரன்கள் ஒரே நேரத்தில் ஆடுவது,குதிப்பது, மூச்சா போவது என தொழில்நுட்பத்தில் நாக்கைதுறுத்தி
மிரட்டியுள்ளனர். படம் வேகமாக போகிறது என்பதை காண்பிக்க ஸ்க்ரீனின் ஓரத்தில் '350km/hr' என்று போடுவது இயக்குனரின் புத்திசாலித்தனத்தை காட்டுகிறது. படத்தை பத்தி முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் என்ன சொல்றார்னு கேட்போம்.



'அருமை தம்பி ரஜினியின் எந்திரன் ரசிகர்களை எப்போதும் மயக்கும் மந்திரன். இந்த கலைத்தாயின் மூத்த மகனின் படத்தை பார்க்க வரும் ரசிகர்களுக்கு 'இலவச பாப்கார்ன்' வழங்கும் திட்டத்தை தமிழக அரசு நாளை முதல் அமல்படுத்துகிறது. மேலும் ஏழை எளிய மக்களுக்கு போய் சேரும் வண்ணம் இந்த படத்தின் பாடல் 'ரிங்டோன்'கள் இலவசமாய் வழங்க இருக்கிறது. எனக்கடுத்து தமிழர்களுக்காக தன்னிகரில்லாமல் உழைப்பவர் தம்பி ரஜினி. அவர் அரசியிலுக்கு வராத பட்சத்தில் எனக்கு நிரந்தர தம்பியாக இருப்பார்' இவ்வாறு தன் கர கர குரலில் கராராய் தெரிவித்தார் நம் முதல்வர்.

இப்போ ரசிகர்கள் என்ன சொல்றாங்கன்னு கேப்போம்.

' ஹெ..சூப்பர்ங்க படம் போற வேகமே தெரில அவளோ ஸ்பீடு'

(பாஸ்.. நீங்க பாத்தது ட்ரைலர்..')

'சூப்பர் ஸ்டார் பின்னிட்டார்... இன்னும் நாலு தபா பாப்பேன்'


''இது வரைக்கும் இந்தியால இப்டி ஒரு படம் வந்தில்லங்க..''



மொத்தத்தில் எந்திரன் ரசிகர்களின் "முதல்வன்". மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம் வணக்கம்.







கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
இவன் சிவன் :
இப்படி எழுதினாதான் என் ப்ளாக் பாப்பாங்க
இவன் சிவன் இவ்வாறு கூறியுள்ளார்…
மேலே கமெண்ட் போட்ட Anonymous:
புத்திசாலித்தனமா நான் இவன் சிவன் பேர்ல கமெண்ட் போட்டுட்டேன்.
எஸ்.கே இவ்வாறு கூறியுள்ளார்…
செம காமெடி.ஆனால மனசாட்சி இல்லாம ஓடாத பத்தையும் ரசிகர்கள் சூப்பர், கலக்கல்னு சொல்ற மாதிரி காண்பிக்கிறாங்களே என்னத்த சொல்றது!
உங்கள் நண்பன் பாலசந்தர் இவ்வாறு கூறியுள்ளார்…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
உங்கள் நண்பன் பாலசந்தர் இவ்வாறு கூறியுள்ளார்…
உங்கள் கற்பனை குதிரையை கொஞ்சம் இல்லை இல்லை நிறையவே தட்டிவிட்டு சும்மா பூந்து விளயாடிடீங்க . என்ன இருந்தாலும் எப்படி தான் இப்படி எல்லாம் உங்களால் முடியுது....... சூப்பர் சூப்பர் சூப்பர்...உங்களிடம் இன்னும் நிறைய எதிர்பார்கிறேன் நண்பா... மேலும் எந்திரன் திரைப்படம் வந்தவுடன் மீண்டும் உங்களுடைய விமர்சனம் படிக்க ஆவலாக உள்ளேன் நண்பரே....
ஒரு வேண்டுகோள்.... என்னுடைய இந்த கட்டுரையை நீங்கள் படிக்க வேண்டும்... உங்களுடைய நண்பரிடமும் கண்டிப்பாக சொல்லுங்கள்...நன்றி...
http://nanbanbala.blogspot.com/2010/09/blog-post_22.html
Gangaram இவ்வாறு கூறியுள்ளார்…
தம்பி இந்த முறை உன் கற்பனை kudhirai 350 KM:) ஸ்பீட்ல ஓடிருக்கு... அருமை ... நல்ல மசாலா பதிவு... keep rocking.....
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
Excellent.... பின்னி பிடரி பிசிறு எடுத்து இருக்கீங்க!...
கலக்குங்க...
all the best
-Vivek friend of Gangaram
இவன்சிவன் இவ்வாறு கூறியுள்ளார்…
டேய் கங்கா மிக்க நன்றி...

விவேக் ரொம்ப நன்றி... உங்க Mr. IT படிச்சிருக்கேன் வாத்தியாரே....
செம்மையா இருந்தது ..... உங்களுக்கு கோபெருஞ்சோழன், பிசிராந்தையார் தெரியுமா :) :)
Madhavan Srinivasagopalan இவ்வாறு கூறியுள்ளார்…
சண் டிவி பாக்கவே சகிக்கலைடா சாமி.. எப்பப் பாத்தாலும்.. இந்திரன்.. வேற மேட்டரே இல்லையா...
முன்பதிவு செய்யுறதுக்கு ஒரு விளம்பரம்.. 'ஒரு வாரத்துக்கு டிக்கெட்டு புல்லுனு ஒரு செய்தி..'' சாமி.... இந்த செய்தி மக்களுக்கு ரொம்ப முக்கியம் பாரு..

நீ பின்னி பேரலுடு மாப்பு.. நல்லா இருக்குது..
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
இவன் சிவன் needs immediate mental care........... let us pray his speedy recovery............thu naye..
\
இவன் சிவன் இவ்வாறு கூறியுள்ளார்…
//இவன் சிவன் needs immediate mental care........... let us pray his speedy recovery............thu naye.//

என்னடா யாருமே திட்டலையேனு பார்த்தேன்..எது போற போக்குல என்னையும் famous ஆக்கிருவாய்ங்க போல...
AnnaiannA இவ்வாறு கூறியுள்ளார்…
Great work mister, Keep the beat up.. you blog is just adorable..
Encore!!!!