குழந்தைகள் அல்லது கவிதைகள்                     
                    
   ஆதாம் தவறு செய்தான் 
    இருந்தும் வரம் பெற்றான்- குழந்தைகள் 

  
  கடவுளும் குழந்தையும் ஒன்று தான் 
    என கேள்விப்பட்ட பின்னே தான் 
     கடவுளை நம்ப துவங்கியிருக்கிறேன்.

 
 "குழலினிது யாழினுது" குறள் படிக்கவில்லை போல
  தம் குழந்தையை தூங்க வைத்து விட்டு 
   "சூப்பர் சிங்கர்" பார்ப்போர்.


 ங்கா...அவ்வா...ப்ப்பா 
  வார்த்தைகளெல்லாம் தமிழகராதியில் 
   உடனடியாய் சேருங்களேன்.


"நிர்வாணம்"- ஒருமனதாய் 
  ஏற்றுக்கொள்ளப்பட்ட மார்க்கம் 
   இவர்கள் உலகத்தில்..
இனி எந்தக்குழந்தைக்கும் முத்தம் கொடுப்பதில்லை 
         இப்போதே சேர்த்து வைக்குறேன் 
                இன்னும் பிறக்காத என் மகளுக்கு....


"பட்டாம்பூச்சிக்கு பெயிண்ட் அடிச்சது யாரு அங்கிள்??"
   போன்ற கேள்விகள் வளர்ந்த மூளைகளுக்கு 
         ஏன் தோன்றுவதில்லை...


பொம்மைகளுக்குள்ளும்,பலூன்களுக்குள்ளும் 
 இவ்வளவு சந்தோசம் ஒளிந்து கிடக்கிறதா...ஒசாமா பின்லேடன் 
 குழந்தையாகவே இருந்திருந்தால் 
  செப்டம்பர் 11 வந்திருக்காது...


கருத்துகள்

Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
siva kalakkittada athula punch ethu theriyuma " ஒசாமா பின்லேடன்
குழந்தையாகவே இருந்திருந்தால்
செப்டம்பர் 11 வந்திருக்காது..."
ரசிகன் இவ்வாறு கூறியுள்ளார்…
அற்புதம் நண்பா...