தி FACEBOOK காரன்

"ஹே சிவா...எப்டி இருக்க..வா(ட்)ஸ்அப்...". ஒரு கீச்சு கீச்சு குரல் எனக்குப் பின்புறம் இருந்து வந்தது. மதுரையின் பெரியார் பேருந்து நிலையத்தின் ஒரு சனிக்கிழமை காலை நேரம். யாரென திரும்பி பார்த்தேன். முக்கால் டவுசர் ஒன்னு போட்டிருந்தான். மூஞ்சில் மீசை இல்லை, ஆனால் வாய்க்கு ஜட்டி போட்டது போல் தாடைக்கு அடியில் தாடி வைத்திருந்தான். அந்த மொகர கட்டையை  நான் அடிக்கடி பார்த்திருப்பது போல் இருந்தது. "டேய் நான் தான்டா ரகு" என சொல்லி அந்த கருமம் பிடித்த கூலிங்கிளாசை கழட்டினான்.

 'அட கோணயா...நீயா..' என்றேன். என்னுடைய பள்ளி நண்பன். ஒரு மூன்றெழுத்து கம்பெனியில் ஐந்து வருடமாய் வேலை பார்க்கிறான்.

'இன்னும் நீ நிக்நேம்ஸ்லாம்..மறக்கல..ஹி ஹி' என சொல்லிக்கொண்டே மொபைலை எடுத்து ஏதோ டைப் செய்து கொண்டிருந்தான்.

'என்னடா பண்ற...'

'இல்ல..உங்கூட பேசிக்கிட்டு இருக்கேன்னு Facebookல அப்டேட் பண்றேன்'

'அடங்... ஏன் மூச்சா போறதையும் அப்டேட் பண்ணேன்'

'அத one hour முன்னாடியே அப்டேட் பண்ணிட்டேன்.... அதுக்கு 18 'Likes'....'

'டேய் மூச்சா போனதுக்கு எதுக்குடா 18 Likes...'

'இதுக்கே இப்டி சொல்ற..போன வாரம் எங்க ஜிம்மி கக்கா போயிருச்சுன்னு ஒரு status மெசேஜ் போட்டேன்..அதுக்கு 27 likes...'

'அட கழிசடைகளா அந்த கண்றாவி facebookல அப்படி என்னதாண்டா இருக்குது...'ரகு கண்ணாடியை கழட்டிவிட்டு என்னை மேலும் கீழுமாய் பார்த்தான். கொஞ்சம் பழைய காலத்து உவமையோடு சொல்லவேண்டுமென்றால் புழுவை பார்ப்பது போல பார்த்தான்.  கண்கள் நம் கேப்டனின் கண்கள் போல சிவப்பாயிருந்தது. கோபமாகிவிட்டானாம். அவன் குடும்பத்தையே திட்டி இருந்தாலும் இவ்வளவு கோபித்திருப்பானா தெரியவில்லை. இருந்தாலும் அவனை வெறியேற்றுவது அவ்வளவு நல்லதில்லை என்பதால் கொஞ்சம் அடக்கி வாசித்தேன்.


'இல்ல மச்சி... அந்த Facebook வென்ற எங்களுக்கும் சொல்லி குடுத்தேனா நானும் இந்த மாதிரி சீன் போடுவேன்ல....'

'அப்டி வா...மொத இந்த மச்சி..மாப்பு..பங்குனு கூப்பிடுறத நிறுத்து....buddy...Dude...bro..folks..னு கூப்டு'

'ஆமா அதென்ன மூனாவுது.. லேடீஸ் மேட்டரா இருக்கு'

'டேய் ஸ்டுப்பிட்..அது ப்ரோ டா'

'சாரிப்பா'

'அப்புறம் பேப்பர்,பென்சில்,சட்டை,பனியன் எது வாங்குனாலும் Facebookல அப்டேட் பண்ணிரு...முடிஞ்சா ஒன்னோட மொபைல்ல போட்டோ புடிச்சு போட்டிரு...'

'எனக்கு புரிஞ்சு போச்சு..அதுக்கப்புறம் அதுக்கு 'cho sweet'னு நாலு பிகருங்க கமென்ட் போடுவாங்க. 'Nice' னு நாலு Formalityக்கு பொறந்தவனுங்க கருத்து தெரிவிப்பாய்ங்க. 

'எக்ஸாக்ட்லி...''ஒரு டவுட்ப்பா... 'எனக்கு எங்க ஆயாவ பிடிக்கும்..அப்பத்தாவ பிடிக்கும்...ஒனக்கும் புடிச்சிருந்தா இத ஒன்னோட Status மெசேஜா வைன்னு ஒரு கூட்டம் சொல்லிக்கிட்டு அலையுதே அத follow 

பண்ணலாமா..'

'அது ஓல்ட் ஸ்டைலுடா... அந்த செண்டிமெண்ட் மேனியா இப்போ செட் ஆகாது...பேசாம நல்ல வீடியோவா பார்த்து upload பண்ணிவிடு'

'அஞ்சரைக்குள்ள வண்டி படத்தில இருந்து ரெண்டு செம்ம சீன Upload பண்ணிவிடவா...பசங்க மத்தில ரீச் ஆகிடலாம்..'

'பொண்ணுங்க செருப்பால அடிப்பாங்க...ஏற்கனவே ஒன்ன பாத்தா ஈவ் டீசிங் கேஸ்ல பெயில்ல வந்தவன் மாதிரி தான் இருக்கு..'

'ஹிஹி...ஒட்டு மொத்த கூட்டத்தையும் எம்.ஜி.ஆர் மாதிரி கவுத்த ஏதாவுது ஐடியா சொல்லுடா..'

'அண்ணா ஹசாரே..மங்காத்தா...கிரிக்கெட்ன்னு current affairs அடிச்சு விடு...உள்ள புகுந்து 'எஸ் யுவர் ஆனர்' னு ஆளாளுக்கு கருத்து சொல்லுவானுங்க..'

'வாவ்'

'பெறகு..ஆன்சைட்னு சொல்லிக்கிட்டு வெளிநாடு போனேனா..ஏர்போர்ட்ல இருந்து இறங்குனவுடனே "ஈ" னு சிரிச்சா மாறி போட்டோ எடுத்து ஒன்னோட Profile பிக்ச்சரா போட்டுரு..'

'டன்...அப்டியே தமிழுல கவிதை..ஹைக்கூனு பரிட்சார்த்த முயற்சிகள் செய்யவா...என்ன சொல்ற ??"

'ஆமா..இவர் பெரிய கமலு..Experiment பண்றாரு...தமிழுல கவிதை எழுதுறதுங்கறது பா.ம.க தனியா எலெக்சன்ல நிக்குற மாதிரி..கரையேற வாய்ப்பே இல்ல... அப்றம் முக்கியமான விஷயம் உங்க வீட்ல என்ன முக்கியமான விசேஷம் நடந்தாலும் உங்க சொந்தக்காரனுக்கு சொல்றியோ இல்லையோ Facebookல சொல்லிரனும். எவன் போட்டோ போட்டாலும் போயி "Like" பண்ணிரனும். பொண்ணுங்க போட்டோ போட்டாங்கன்னா போடுற மொத கமெண்ட் நம்மளோடதா தான் இருக்கும். எவனுக்காவுது பொறந்த நாள் வந்ததுன்னு வை...'

'கால் பண்ணி விஷ் பண்ணனும்...'

'யு இடியட்....அப்புறம் சாதா பப்ளிக்கும் நமக்கும் என்ன வித்யாசம். அவன் உன்னோட உயிர் நண்பனாவே இருந்தாலும் அவன் Wall ல போயி Happy Birthday எழுதணும். கால் பண்ணி விஷ் பண்றதெல்லாம் ஒரு Facebookகாரன் பண்ணக்கூடாது.'

'ஓகே'

'சிரிக்கிறது கூட கெக்கே பேக்கே னு சிரிக்கப்படாது. 'lol :)' னு தான் சிரிக்கணும். OMG,BRB மாதிரி வார்த்தைகளெல்லாம் யூஸ் பண்ணியே ஆகணும். தீபாவளி,பொங்கல் னா தலைவர்கள் மாதிரி வாழ்த்து செய்தி ஒன்ன போட்டு விட்ரு. எடேலே youTube போயி நாலு வீடியோவ upload பண்ணிவிடு. நீ ஓட்டுப் போடுறியோ இல்லையோ,டேக்ஸ் கட்டுவியோ மாட்டியோ, 'அவன் சரியில்லை இவன் சரி இல்லை..அய்யகோ நாடு எங்க போகுது னு' எந்நேரமும் பொங்கிக்கிட்டே இரு. உன்ன எல்லாரும் இவரு தாறுமாறான சிந்தனைவாதினு நம்பிருவாங்க.'

'டேய் பொறு...எனக்கு தல கிரு கிருனு சுத்துது..'

'சூப்பர்..இதான் சான்ஸ்.."Iam not doing well'னு ஒரு மெசேஜ் தட்டு.அப்புறம் பாரு...

'????????????????????'கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
ங்கொய்யால.இந்த பேஸ்புக்கை கண்டு பிடிச்சவன் நாசமா போக,பதிவுல போட்டது அத்தனையும் நிறைய பேருக்கு உண்டான உண்மையான அனுபவிச்ச எரிச்சலான விஸயங்கள்தான். அவ்வளவு லொல்லு பண்றாங்கப்பா.
Lusty Leo இவ்வாறு கூறியுள்ளார்…
சிவராஜ், நல்லா எழுதியிருக்கப்பா. நான் உன் கிளாஸ் மேட் தான் (தேனி நாடார் ஸ்கூல், என்னை எல்லாம் உனக்கு ஞாபகம் இருக்குமான்னு தெரியல). நம்ம SK இதே ஃபேஸ்புக்-ல இந்த பதிவோட லிங்க் குடுத்திருந்தான். அதப் பாத்துட்டு தான் வந்தேன். பதிவு டாப். வாழ்த்துக்கள். -Prasanna Varathan
இவன் சிவன் இவ்வாறு கூறியுள்ளார்…
டேய் பிரசன்னா ..உன்ன மறக்க முடியுமா?? எப்டி இருக்க?? வீட்ல எல்லாரும் சௌக்கியமா??
Lusty Leo இவ்வாறு கூறியுள்ளார்…
நல்லா இருக்கேன். வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்கடா. இப்போ பஹ்ரைன்-ல இருக்கேன். Dot Net, ஸாப்ட்வேர்ன்னு வாழ்க்கை போகுது. நீ எப்படி இருக்க? வீட்ல எல்லாரும் எப்படி இருக்காங்க?