மிரட்டல் : சொல்லிகிறமாதிரி ஒரு படம் கிடையாது தான். இப்போ தமிழ்நாடே சொல்ற அதே வாசகத்தை நானும் சொல்றேன் "சந்தனதுக்காக பாக்கலாம்". வசனம் தான் தமிழுல..மத்த படி அக்மார்க் தெலுங்கு படம். நைட்டு தூக்கம் வரலேன பாக்கலாம் .
அட்டக்கத்தி: பயங்கர ஹைப் ஏத்தி ரிலீஸ் ஆன படம்.படு சுமார் ரகம். பாட் டெல்லாம் நல்லா இருக்கும் . ஆனா அதத்தான் டி.வில போட்டுரானே..நந்திதா சிரிக்கும்போது கன்னத்துல விழுற குளிக்காக கிளைமேக்ஸ் வரைக்கும் உட்காந்திருந்தேன்.
சுந்தரபாண்டியன்: கைப்புள்ள மாதிரி அடி மேல அடி வாங்குனதுக்கு பிறகு கொஞ்சம் நிம்மதி தந்த படம். அதே சசிகுமாரிசம். பரோட்டா சூரி காமெடி செம்ம கலக்கல்.ஏற்கனவே வந்த படங்கள மிக்சில போட்டு அடிச்சு எடுத்த மாதிரி இருக்கு ,ஆனா ரசிக்கிற மாதிரி இருக்கு.
நான் : எதோ இங்க்லீஷ் படத்தோட உல்டானு ஒரு பதிவுல படிச்சேன். "Identity Theft" வச்சு இங்க்லீஷ்ல ஒரு நூறு படம் வந்திருக்கும் ,அதுனால அத ஏத்துக்க முடியாது. புத்திசாலித்தனமான த்ரில்லர். குடு குடு திரைக்கதை (எத்துன நாள் "விறு விறு " னு சொல்றது ..மாத்துவோம் ). நல்ல படம். விஜய் ஆண்டனி இன்னும் ஒரு டீ ஸ்பூன் நடிச்சிருக்கலாம்.
முகமூடி : இந்த படத்துக்கு இவ்வளவு பில்டப் கொடுத்திருக்க தேவையில்லை. இது சூப்பர் ஹீரோ படமாம். குங்க்பூ ,அது இதுனு ஒரு மாதிரி முயற்சி பண்ணாங்க. பாவம் மிஸ்கினுக்கு செட் ஆகல.முந்தய படங்களுக்காக மன்னிசிரலாம்.
மாற்றான்: இந்த வருசத்தோட மகா மோசமான படம். ரெட்டைத் தலைவலி. நம்பி ரெண்டாவுது நாள் புக் பண்ணி சில நண்பர்களை வேற கூட்டிட்டு போனேன். அதில் பலர் இன்னைக்கு வரைக்கும் என்கூட பேசுரதில்லை.ஹாரிஸ் பாஸ்..எங்கயாச்சும் காப்பி அடிச்சாவுது நல்ல பாட்டா போடுங்க...
பீசா : டக்கர் படம். சும்மா புகுந்து விளயாடிட்டாங்க. அம்பது கோடிக்கு படம் எடுக்கும் புத்திசாலிகளெல்லாம் இந்த படம் பாத்தா தேவல.முழுக்க இருட்டு ,ஒரு டார்ச்,கொஞ்சம் இசை இத வச்சி நம்மள ஒரு நாப்பது நிமிஷம் உலுக்கி எடுத்திடுறாங்க...அடுத்த படத்துல "கார்த்திக் சுப்புராஜ்"னு பேர் போடும் போது கை தட்டுவேன். எல்லாரும் தியேட்டர்ல போய் அவசியம் பாக்க வேண்டிய படம்.
துப்பாக்கி: ஏழெட்டு விமர்சனம் படிச்சிட்டு, நாலஞ்சு தடவ கால் பண்ணி கேட்டுட்டு "சேதாரம் இருக்காது" னு நம்பகமான தகவல் கெடச்சப்றம் தான் போனேன்.ஒரு தரமான படம். கடைசி வரைக்கும் விஜயானு நம்பவே முடில.முருகதாஸ் எப்படியும் இதவே நாலஞ்சு வருசத்துக்கு எல்லா மொழிலேயும் ரீமேக் பண்ணிட்டு இருப்பார்.இதல்லாம் ஒருபக்கம் இருந்தாலும் சில படங்கள நா எதிர் பாத்திட்டு இருக்கேன்..விஜய் பாணில சொல்லணும்னா I am W(h)aiting....அதெல்லாம் எதுன் னா ..
1) பாலாவின் "பரதேசி" (சொதப்ப சான்சே இல்ல...என்ன.. க்ளைமாக்ஸ்ல யாரு சாகப்போறாங்கன்னு பதறிப்போய் உக்காந்திருக்கணும்)
2) நீ தானே என் பொன் வசந்தம்.(பாட்டெல்லாம் சுமாரா தான் தெரியுது..சமந்த்தாவுக்காக மஸ்ட் வாட்ச் )
3) கமலின் "விஸ்வரூபம்" (நாங்கெல்லாம் கமல் போஸ்டரவே நூறு நாள் பாப்போம்..இத விடுவோமா..)
4) தங்க மீன்கள் ( "கற்றது தமிழ்" ராமோட படம். வேற காரணம் வேணுமா??)
5) கௌரவம் (ராதாமோகன் படம் கண்டிப்பா டீசன்ட்டா இருக்கும் )
6) ஆதிபகவன் (அமீர் )
7) கடல் (ஒன்னு மணிரத்னம்..ரெண்டு ராஜீவ் மேனன்..எல்லாத்துக்கும் மேல ஏ.ஆர் .ஆர்.. )
8) நடவுல கொஞ்சம் பக்கத்த காணோம் (புது டீம்...நல்லா இருக்கும்னு அரசல் புரசலா ஒரு பேச்சு இருக்கு..)
கொஞ்சம் நல்லா கவனிச்சோம்னா இந்த வருஷம் வெளியான பட பெரிய படங்கள், நம்ம ரசனைய ரொம்ப மலிவா எடை போட்டுட்டாங்க. அதுக்கு முக்கிய காரணம் நல்ல படங்கள நாம கண்டுக்கல. "அழகர்சாமியின் குதிரை" ஓடிருந்துச்சுனா " ராஜபாட்டை"னு ஒரு படம் வந்திருக்காது. ஒன்னும் வேணாம் "ஆரண்ய காண்டம்" னு ஒரு படம் பாஸ்...எப்படியாவுது தேடி பிடிச்சு பாருங்க... இதப்போயா பாக்காம விட்டோம்னு கண்டிப்பா வருந்துவோம். நல்ல படங்கள ஆதரிச்சோம்னா தமிழிழும் பியானிஸ்ட், ப்ரஸ்டீஜ், மில்லியன் டாலர் பேபி போன்ற படங்களை எதிர்பாக்கலாம் (அதையே எடுத்திராதீங்கப்பா..)
கருத்துகள்