ஒரு ஆரஞ்சுக்காவியம் -4

 

ஆரஞ்சுக்காவியம் -பகுதி 1

ஆரஞ்சுக்காவியம் -பகுதி 2

ஆரஞ்சுக்காவியம்-பகுதி 3

க்கத்தில் இருக்கும் தல்பீரிடம் கூட சத்தம் போட்டு பேச வேண்டியிருந்தது. அரங்கம் எங்கும் மக்கள் வெள்ளம்.ஏதும் காலி சீட் தென்படவில்லை.  எல்லோரும் கூட்டம் கூட்டமாய் வந்திருந்தனர். சிலர் முகம் முழுக்க பெயிண்ட் செய்திருந்தனர். ஐரோப்பியர்களின் கால்பந்து பைத்தியம், இந்திய கிரிக்கெட் கிறுக்குத்தனத்துக்கு சற்றும் சளைத்தது அல்ல. நான் இயல்பாய் இருப்பது போல இடையிடையே கை தட்டிக்கொண்டு மேட்ச் பார்த்தேன்.நான் அடிக்கடி தலையை திருப்பி பார்ப்பதை பார்த்த ரெபெக்கா "சிவ்வு..என்ன முழியே சரியில்ல...யாரும் பின்னால இருந்து கேலி செய்றாங்களா..எதுவும் தூக்கி வீசுனாங்களா". "இல்லை" என தலையாட்டினேன்.


ரெபெக்கா கிட்டத்தட்ட ஆறடியில் இருப்பாள். எங்களுக்கு லோக்கலில் எந்த டவுட் வந்தாலும் முதல் கால் அவளுக்குத்தான் போடுவோம். வலது கரத்தில் டிராகன் டாட்டூ போட்டிருப்பாள். யாராவது வம்பிழுத்தால் வெளுத்து வாங்கிவிடுவாள். அவளை சமாதானப்படுத்தி சாந்தமாய் வைத்திருப்பதே யோரீஸ்ஸின் தலையாய வேலை.  தல்பீர் அவள் பக்கத்தில் போய் காதில் பேசினான்.சிரித்துக்கொண்டே தொடர்ந்தான். எனக்கு கொஞ்சம் எரிச்சலாய் இருந்தது. அவள் திரும்பி என்னைப்பார்த்து சிரித்தாள். எங்கோ கையை நீட்டிப்பேசினான். அந்த திசையில் பார்த்தேன். நிறைய பேர் கொடி வைத்து உட்கார்ந்திருந்தார்கள். நடுவில் மானஸ்வி தெரிந்தாள். எனக்கு அந்த நொடியில் அவளைத்தவிர  மொத்த உலகமும் மங்களாகத்தெரிந்தது. இந்தக்காதல் எவ்வளவு விவஸ்தை கெட்டது..பக்கத்தில் அவன் காதலன் இருப்பதையெல்லாம்  என் மூளைக்கு அனுப்பாமல் வெறும் கனவுகளை போதை மாத்திரை போல எனக்கு வழங்கிக்கொண்டிருக்கிறது. ஹோம் டீம்  சீசன் டிக்கெட் என்பதால் அவளும் பியூஸும் அதே ஸ்டேண்டில் இருந்தார்கள்.

அதுவரை கோல் எதுவும் விழவில்லை. ஆஃப் டைம்  வந்தது. ரெபெக்காவும் யோரீஸும் பக்கத்தில் வந்தார்கள்.யோரீஸ் தன் கண்ணாடியை மேலே தூக்கி விட்டிருந்தான். என் தோளில் கையை வைத்தபடி "கங்கிராட்ஸ்.. ப்ரபோஸ் பண்றதுக்கு முன்னாடியே ஃப்ளாப் ஆகிற காதல் அமைவதெல்லாம் பாக்கியம் " என்றான். சிரித்தேன். ரெபெக்கா என்னை ஒரு மாதிரி தலையை சாய்த்து பார்த்தாள்.

"சிவ்வு..ஃபீல்  பண்ற போலயே..அந்த பொண்ணு அவ்வளவு ஒன்னும் அழகா தெரில..ஏதோ மாடிவீட்டு பூனைக்குட்டி மாதிரி இருக்கு

தல்பீர் நாலு டின் பீர் மற்றும் சிக்கன் நக்கட்ஸ்ஸூடன்  வந்தான். அவன் பசி தாங்க மாட்டான். வரும்போதே சிக்கனை மென்று கொண்டே வந்தான்.அவனுக்கு நாங்கள் என்ன பேசினோம்னு கேட்டிருக்க வாய்ப்பில்லை, இருந்தாலும் அவனாகவே யூகித்துப் பேசினான்.

  "ஜி..நீங்க உங்க மூளை வழியே யோசிக்கல..வேற வழியே யோசிக்கிறீங்க.." 

எல்லோரும் சிரித்தார்கள். அவளுடன் பழகி வெறும் ரெண்டு நாட்கள்  தான், இருந்தும் அவளை நினைக்கையில் ஒரு மின்காந்த அலை உடலுக்குள் உருவாகிறது. ஒரு பீரை எடுத்து பாதியை மண்டினேன். எல்லோரும் என்னையே பார்த்தார்கள். சொல்லத்தயக்கமாய் இருந்தது. இருந்தும் சொன்னேன். "ஒரு வேளை..அந்த பியூஸ் அவளுக்கு ஃப்ரெண்டா இருந்தா.. ஜஸ்ட் க்ளோஸ்  ஃப்ரெண்ட் " 

தல்பீர் தலையில் கைவைத்துக்கொண்டான். மெதுவாய் என்னைப்பார்த்தான். "சிவா..இன்னும் உங்களுக்கு சரியா புரியல..அவுங்க ரெண்டு பேரும் காலேஜ்ல இருந்தே லவ்வர்ஸ்ஸாம்..உங்க மண்டைல ஓடுற படத்தை அழிச்சிருங்க...அவன் ஒன்னும் வில்லக்கார ஃபாரீன் மாப்பிள்ளை கிடையாது..ரொம்ப நல்ல பையனாம்..நீங்க உங்க சினிமா மூளைய ஓரமா வச்சிட்டு..மிச்ச பீரை முடிங்க.."

ரெபெக்கா தல்பீரிடம் "உஸ்..போதும் "  என்றாள் விதியே தலையில் டர்பன் கட்டிக்கொண்டு வந்து என்னிடம் பேசுவது போல இருந்தது. இனிமேல் அவளிடம் கொஞ்சம் தள்ளித்தான் இருக்க வேண்டும் என முடிவு செய்து கொண்டே பீரை இறக்கினேன். ஆனால் இந்த சோகம் பீருக்குள் மூழ்க மறுக்கிறது. ரெண்டே நாளில் ஒரு காதல் உருவாகி இவ்வளவு தூரம் வளர்ந்துவிடுமா?.. இது கேன்சரை விட கொடூரம். எல்லோரும் திரும்பவும் மேட்ச் பார்க்க ஸ்டாண்டுக்கு நடந்தோம். தூரமாய் இருந்த வெண்டிங் மெஷின் முன்னால் மானஸ்வி நின்று கொண்டிருந்தாள். மூவரையும் முன்னால் நடக்க விட்டுவிட்டு என் கால் தானாகவே மெதுவானது. அவர்கள் பார்க்க முடியாத தூரத்தில் போனதும் அது தன் இலக்கை நோக்கி நகர்ந்தது. அந்த கடவுளே ஏதாவது நேர்த்திக்கடன் போட்டுக்கிட்டால் கூட என்னையெல்லாம் திருத்த முடியாது.

அவள் ஒரு யூரோ காயினை உள்ளே போட்டுவிட்டு கோலாவுக்கு காத்திருந்தாள். அது வந்த பாடில்லை. மெஷினை தட்டிக்கொண்டிருந்தாள்.  நான் பக்கத்தில் போனேன்.ஒரு லைட் ப்ளூ ஜீன்ஸ் மற்றும் மஞ்சள் நிற டீ ஷர்ட் அணிந்திருந்தாள். அதற்குமேல் துப்பட்டா போல  மெரூன் கலர் ஸ்கார்ஃப் போட்டிருந்தாள். அந்த உடுப்பில் அதை விட அழகாய் தெரிய வாய்ப்பில்லை. 

"ம்..ம்.. வெண்டிங் மெஷின்னின் தலையை தடவிக்கொடுத்தால் உள்ளேர்ந்து எதுவும் விழுகும்னு உங்களுக்கு சொன்னாங்களா.."

"ஹேய் சிவா...ஸ்வீட் பாய்.. ஐ'ம் தேர்ஸ்ட்டி ஹெல்ப் மீ ப்ளீஸ்.. "  

முகத்தை குழந்தை போல வைத்து அவள் கெஞ்சுவதை பார்க்க எனக்கு ரெண்டு கண்கள் போதவில்லை. அப்படியே "புதுக்கோட்டை" தனுஷ் போல அவளுக்கு டமாலென தாலிகட்டி தூக்கிப் போய்விடலாம் போலிருந்தது.கைவசம் தாலி,தைரியம் ரெண்டும் இல்லாததால் அந்த முடிவை கைவிட்டேன்.

வெண்டிங் மெஷினின் திரையை பார்த்தேன்.  டச்சு மொழியில்   எதுவோ ஓடியது. வேகமாய் வந்து தோளை வைத்து ஒரு இடி இடித்தேன். வெண்டிங் மெஷின் குலுங்கி உள்ளே இருந்து ஒரு கோலா பாட்டில் வெளியே வந்து விழுந்தது. அவள் "வாவ்" என கத்திக்கொண்டு அதை பொறுக்கினாள்.என் தோளில் தட்டி "தேங்க்ஸ்" என்றாள். "ஒரு ஹக்காவது பண்ணியிருக்கலாம் " என மனம் ரகசியமாய் ஏக்க பெருமூச்சு விட்டது.

"மான்ஸ் மேட்ச் பாக்கலயா..ஆரம்பிச்சிட்டது போலயே.."

 "ஐயோ..சுத்த போர்..எனக்கு ஃபுட் பால் சுத்தமா புடிக்காது..பல நேரம் புரியாது..ஆமா இந்த ஆஃப் சைடுனா என்னாது..பியூஸ் எவ்வளவோ சொன்னான்..எனக்கு ம்ஹூம்.."

"ஆஃப் சைடுங்கிறது..கிரிக்கெட்ல டக்வர்த் லூயிஸ் ரூல் மாதிரி..நிறைய பேருக்கு புரியாது..ஆனா இருந்தும் அத வச்சு சண்டை போடுவாங்க.."

எனக்கும்  உண்மையில் ஆஃப் சைடு பற்றி முழு அறிவு கிடையாதென்பதால் அப்படி ஒரு பிட்டை போட்டேன். அவள் சிரித்தாள். கொஞ்சம் நேரத்தில் பயங்கரமாய் சிரித்தாள். நிறுத்தாமல் தொடர்ந்து சிரித்தாள். "இது அவ்வளவு பெரிய ஜோக்கில்லையே" என என் மனம் கொஞ்சம் தயங்கியது. இதுக்காக அவளிடம் சண்டையா போட முடியும். சிரித்து விட்டுப்போகட்டும்.நான் செய்த முன் ஜென்ம புண்ணியமாய்க்கூட இருக்கலாம்.   


  

 "கு(ட்) ஒன்" என்றாள். "சரி ..நீங்க போகலையா.."

"ஃபுட் பால் பிடிக்கும் தான்..அதை விட உங்க கிட்ட வந்து கடலை போடுறது ரொம்ப பிடிச்சிருக்கு..அதான் இருந்துட்டேன்.."

"குட் பிக்கப் லைன்..பேசுறத பாத்தா நீங்க பயங்கரமான காதல் மன்னன் போலயே"

"இதையே தான் கல்யாணமாகிப்போன என் எல்லாக்காதலிகளும் சொன்னாங்க.."

சிரித்தாள். நாற்பத்து ஆறு ரன்னில் இருந்து ஒரு பவுண்டரி அடித்தது  போல இருந்தது. அவளின் அந்த சிரித்த உதடு  மனதில் கிளர்ச்சியை கிளறியது. ஏற்கனவே இரட்டை சதம் அடித்தவன் ஒருத்தன் உள்ளே உட்கார்ந்து கொண்டு கை தட்டி ஃபுட்பால் பார்த்துக்கொண்டு இருக்கிறான். இப்படிப்பட்ட தேவதையை வைத்துக்கொண்டு எப்படி அவனால் அங்கே மேட்ச் பார்க்க முடிகிறது. என்னுடைய பாத்ரூம் செருப்பால் மனதிற்குள் பியூஷை அடித்தேன். 

"தம்??" என்றேன் பாக்கெட்டில் தேடிய படி.

"நோ வே..மேன்..பியூஸ்க்கு ப்ராமிஸ் பண்ணிருக்கேன்..இனிமே ஸ்மோக் பண்ண மாட்டேன்னு..யூ கேர்ரி ஆன் "

 இவன் குடிக்கலேன்னாலும் குடிக்கறவுங்கள ஏன் கெடுக்கிறான்னு கோவம் பற்றிக்கொண்டு வந்தது.ஒன்றை மட்டும் எடுத்து பற்ற வைத்தேன். லேசாய் இழுத்தேன்.  குனிந்து புகையை விட்டேன். அவள் என்னை ஏக்கமாய் பார்த்தாள். குழந்தை ஐஸ்க்ரீமை பார்ப்பதைப் போல பார்த்தாள். திடீரென அந்த கனவு எந்தவித முன்னறிவிப்புமில்லாமல் நான் முழித்திருக்கும் போதே வந்தது. "நானும் மானஸ்வியும் பூக்கள் போட்டிருக்கும் கட்டிலில்   மணக்கோலத்தில் அமர்ந்திருந்தோம். ஒருவர் மீது ஒருவர் சாய்ந்திருந்தோம்..ஒரே தம்மை மாறி மாறி இழுத்துக்கொண்டு சிரித்து பேசிக்கொண்டிருக்கிறோம்..அந்த அறை முழுவதும் காதல்ப்புகை". என்ன ஒரு காதல் காட்சி. பியூஸே பார்த்திருந்தால் கூட ரசித்திருப்பான்.    

"ஒரு  பஃப்.." என தம்மை அவளிடம் நீட்டினேன்.

  "நோ வே "

"அப்படி டக்குனு நிப்பாட்டுனா நல்லதில்ல.."

"யாருக்கு" 

"சிகரெட் கம்பெனிக்காரனுக்கு"

அவள் "உச்" என சொல்லி குறும்பாய் பார்த்தாள். திரும்பி யாரும் வருகிறார்களா என பார்த்தாள். கண்டிப்பாய் வாங்கப்போகிறாள். மனசு குதூகலமானது. இப்போது பியூஸ் வந்தால் எப்படியிருக்கும் என யோசித்தேன். இந்த காதல் எனக்குள் இருக்கிற எல்லா வில்லத்தனத்தையும் வெளிக்கொண்டு வருகிறது. அவள் யோசித்த படி கையை நீட்டினாள். அதற்குள் "ஹே..சிவ்.." என சத்தம் கேட்டது.ரெபெக்காவும், தல்பீரும் நின்று கொண்டிருந்தார்கள். மானஸ்வி "வரேன்..சிவா.." என ஹெட் மாஸ்டரைக்கண்ட அஞ்சாங்கிளாஸ் பெண் போல ஸ்டாண்ட் நோக்கி ஓடினாள்.
ரெபெக்கா என் பக்கத்தில் வந்து சிகரெட்டை பிடுங்கி புகைத்தாள். இப்போது யோரிஸும் ஓடி வந்திருந்தான். "அயாக்ஸ் டீம் கிரிஸ்ட்டியன் எரிக்சன்,இப்போ பத்து நிமிஷம் முன்னாடி தான் கோல் போட்டான் " 

"ஓ அதான் அங்க மயான அமைதியா..அப்போ நம்ம முன்னாடியே ஓடிருவோம்..நம்ம பண்ண சேட்டைக்கு அவனுங்க நம்மள வச்சு செஞ்சுருவாங்க.."

"ஏற்கனவே ஆகிருச்சு" என்றாள்.

அப்போது தான் கவனித்துப்பார்த்தேன். தல்பீர் நனைந்திருந்தான்.

"என்னாச்சு?"

"நம்ம ஒருத்தன கேலி பண்ணோம்ல..அவன் எங்கிருந்து வந்தான்னே தெரில..கோல் விழுந்தோன்னே நம்ம தல்பீர் மேல ஒரு பெரிய ஜக்ல இருந்த பியர ஊத்திட்டான்.."

தல்பீர் பக்கத்தில் போனேன். அவன் அவமானமாய் முகத்தை வைத்திருந்தான். யோரீஸ் பக்கம் திரும்பி "..த்தா இதெல்லாம் பனிஷ்மெண்ட்டா..அவன் அதை கீழே ஊத்தியிருந்தாக் கூட நம்மாளு நக்கி குடிச்சிருப்பான்.." என சொன்னேன்.

"சூத்தியா" என கத்திய படி தல்பீர் விரட்டினான். நான் வேகமாய் ஓடினேன். பின்னாலேயே யோரீஸும் ,ரெபெக்காவும் வந்தார்கள்.


                                                                                                                       --தொடரும் 
கருத்துகள்

Robert இவ்வாறு கூறியுள்ளார்…
சிறப்பு.. ஒரே ரொமான்ஸ் மூடா  தல, அங்க வேல ஏதும் பார்த்த மாதிரி தெரியலயே .... 
Robert இவ்வாறு கூறியுள்ளார்…
அடுத்த பாகத்தை சீக்கிரமா எழுதுங்க ...
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
Enna pa Thambi... When will u post the next chapter?
இவன் சிவன் இவ்வாறு கூறியுள்ளார்…
எழுது...எழுதுங்கிறீங்க..எழுதுனதுக்கப்பறம் ஒரே மயான அமைதியா போயிருதே....☺️☺️