ஞாயிறு, 15 நவம்பர், 2009

CAST AWAY(2000)


Tom Hanks நடிப்பில் 2000ல் வெளிவந்து அனைவரின் நெஞ்சத்தையும் கொள்ளை கொண்ட படம் இது.ஏற்கனவே இயக்குனர் "Robert Zemeckis"சுடன் சேர்ந்து 'forrestgump' யில் கலக்கிய hanks, நடிப்பில் சிகரம் தொட்ட படம் இது என்றால் மிகையாகாது.

இந்த பதிவை படிக்க நேரும் எல்லோரும் இந்த படத்தை பார்த்திருக்கும் சாத்தியங்கள் அதிகம் என்றாலும், திரும்ப திரும்ப பார்க்க சலிக்காத படங்களில் இதுவும் ஒன்று என அனைவரும் ஒத்து கொள்வார்கள் என்றே நம்புகிறேன்.

"FEDEX" shipping நிறுவனத்தில் பணிபுரியும் Chuck Noland(Tom Hanks) ஒரு விபத்தில் தனியொரு தீவில் மாட்டிக்கொள்வதே படத்தின் மையக்கதை. துரு துருவென திரியும் Hanks தீவில் மாட்டிக்கொண்டு படும் அவஸ்தை ஆரம்பத்தில் சிரிப்பாக தெரிந்தாலும் போக போக நம்மை கலங்க வைத்து விடும்.அதுவும் அந்த நெருப்பை வரவைக்க அவர் படும் அவஸ்தை விவரிக்க முடியாத ஹைக்கூ.


படத்தில் அந்த தீவு காட்சிகளில் வசனமே அதிகம் இருக்காது.பின்னணியில் வெறும் கடல் அலை சத்தம் மட்டுமே. பேச்சுத்துணைக்கு ஆளில்லாமல் வாலிபாலுக்கு 'wilson' என பெயரிட்டு பேசுவது, குகைக்குள் காலண்டர் போட்டு வைப்பது போன்ற காட்சிகள் தனிமை பயத்தை நமக்கும் தரும்.

ஒரு மனுஷன் இப்படியெல்லாம் நடிக்க முடியுமான்னு "TomHanks" நடிப்ப பாக்கிறபோது எண்ணம் வரும். அதுவும் அந்த தீவு காட்சிகளுக்காக 40 பவுண்ட் (20 KG) எடை குறைந்தாராம்(ஒரு வேலை சொந்த படம் என்பதாலோ!!!)

ஊருக்கு திரும்பி வரும் Hanks சிற்கு நடக்கும் சம்பவங்களை பார்க்கையில் நமக்கு ஆங்கிலம் தெரியவில்லை எனினும் அழுகை முட்டிக்கொண்டு வரும். கடைசியில் இப்போதும் இவன் தனி தீவில் தான் இருக்கிறான் என்பது போல முடிவது கவிதை.இந்த படம் பார்த்த பிறகு TomHanks படங்களை விரட்டி விரட்டி பார்த்ததெல்லாம் தனிக்கதை.இயக்குனர் Robert Zemeckis மற்றும் நம்ம TomHanks


Gladiator படத்திற்காக russel crowe விற்கு 2000ம் ஆண்டிற்க்கான ஆஸ்கார் கிடைத்தது. எனக்கென்னமோ அது நம்ம hanksசிற்கு தரப்பட்டிருக்க வேண்டியது என்றே தோன்றுகிறது .

வெள்ளி, 16 அக்டோபர், 2009

காதல் கடிதம்

காங்கிரசிற்கு ஆதரவாய் கைகளை நீட்டி
முருக கடவுள் நின்றிருந்த காலெண்டரை பார்த்தேன்.
அன்றைய தேதிக்கு 'சிம்மம்-கேடு'
என ஆருடம் சொன்னது.
உண்மைதான் பலன் எனக்கு
"பன்மையில்" பலித்து கொண்டிருந்தது....

"ஆரம்பிக்கலாமா??" என பேப்பரை
என் பக்கம் தள்ளினான் பாலன்.
மீசை,தாடி இல்லா T.R போலிருப்பான்
எங்கள் ஒரு பானை சோற்றில்
ஒரு சோறு இவன் ......

"இதெல்லாம் எந்த நாய் செய்யுதோ
அந்த நாய் தான் எழுதனும்னு " சீறி
அந்த அமரக்காதலை
அஃறினை காதலாக்கினேன்.

"டேய் என் எழுத்து கேவலமா இருக்கும்
பிழை வேறு வரும்''
- என தன்னிலை விளக்கம் அளித்தான்
தன்மான தமிழன்.

"அதாவுது சிந்தனை உனது
சிற்பம் எனது ??!!!!" என்றேன்
"சூப்பர்டா.. மச்சான் எடேல இந்த மாதிரி
பிட்ட போடணும்டா " என்றான்.

இந்த சப்பை தமிழுக்கே
சங்க தமிழ் "feel" கொடுத்தான்.
"ஊரார் பிள்ளையை" பழமொழி வேறு
உள்ளுக்குள் வந்து போனதால் உடன் பட்டேன்!!!!!!!!!

"சொல்லித்தொல" எனச்சொல்லி
காகிதத்தின் நெற்றியில் "" போட்டேன்.
"அவ அழகிருக்கே அது என்னை அப்டியே
கொல்லுதுடா " வென சொல்லி பாயை பிராண்டினான்...

பேனாவை பின்னால் கூடி நெற்றியில் குத்தி
சிந்தனை கிடங்கை தோண்டுவது போல்
"கவிஞர்" டச் கொடுத்தேன்....

சட்டென " அழகு திளைக்கும் தேவதை நீ
என் அறிவை கொலைக்கும் ராட்சசி நீ " என்றேன்.
"அதான் அதே தான்..." என
குணா கமல் போல் கத்தினான்.
அவன் உளறியதையெல்லாம்
முடிந்தவரை உருமாற்றினோம்.

"வெட்கம் உனது தாய் மொழி
நீ வாய் மூடி சிரிக்கையில்
அது வெறும் வாய்மொழி" என்றெல்லாம் எழுதினோம்.

கிட்டத்தட்ட அவள் கிட்னி தவிர
அனைத்தையும் வர்ணித்தாகிவிட்டது!!!!!
கடிதத்தை மீண்டும் ஒருமுறை
படித்து பார்த்தான்.
"அன்புள்ள" பக்கத்தில்
அவள் பெயர் போட்டான்.

" டேய் ஐஸ்வர்யாராய்க்கு கடிதம் எழுதி
மனோரமாவுக்கு அஞ்சல் செய்வது போலுள்ளது" என்றேன்
நான் உரைத்தது
அவனுக்கு "உறைத்ததாய்" தெரியவில்லை.
வரேண்டா மச்சான்
என சொல்லி மறைந்தான்

கால சக்கரம் 4 வது கியரில் சுற்றியது
சமீபத்தில் தி.நகர் கூட்டத்தில் பாலனை பார்த்தேன்.
நலம் விசாரிப்புகளுக்கு பின்
நாசூக்காய் கேட்டேன்..
"இல்லடா ...கொடுக்கவே இல்ல
அவளுக்கு இப்ப கல்யாணமெல்லாம்
முடிஞ்சு போச்சு" ன்னு சொல்லி சிரிச்சான்.....

நாசா சொல்கிறது
"சொல்லப்படாத காதல் பூமியில்
சுற்றிக்கொண்டே இருக்குதாம்......... "வியாழன், 6 ஆகஸ்ட், 2009

பொய்கள்

'எப்படி இருக்கீங்க??' நமக்கு தெரிந்தவர்கள்
அவர்கள் கண்ணில் நாம் தெரிந்தவுடன் கேட்கும் கேள்வி..
"நல்லா இருக்கேன்!!!!" நாமும் வாடிக்கை பதில் சொல்வோம்!
அவர்கள் உள்ளூர கேட்காவிடினும் நாம் உண்மையாய் சொல்லாவிடினும் இந்த பொய்கள் அழகு!!!!

தூரத்து சொந்தத்திடம் துக்கம் விசாரிக்க செல்வோம்
சாப்பிட்டு போங்க என சம்பிரதாயமாய் சொல்வர் ..
"இப்போ தான் சாப்பிட்டோம்" என கொலை பசியிலும்
கொடுர பொய் சொல்வோம் ...

தொலை பேசியில் எதிர் முனையில் எதிரியே பேசினாலும்
"ஹலோ" என ஆங்கில பொய்யுடன் தான ஆரம்பிப்போம் !!!!!!!!!!!!!!

நம் கற்பனை குதிரை போட்ட சாணிகள் - பொய்கள்
நம் மூளைக்கும் இதயத்துக்கும் நடக்கும் சண்டையில்
பிறக்கும் சங்கட குழந்தைகள் -பொய்கள்
மாயைகள் பார்க்க எப்போதும் மயக்கங்கள் நமக்கு
இல்லாமலா திரை அரங்குகள் நிறையுது!!!!

சில நேரங்களில் உண்மைகள்
நம் முன் அம்மனமாய் நின்று சிரிக்கும்
ஆடை பொய்களே நம் அவமானம் மறைக்கும்...

தீமை பயக்கா பொய்கள் சொல்லலாம்...
நன்மை நடக்க வாய்மையும் கொல்லலாம்!!!!
அகம் மகிழ பொய் சொல்லலாம்
பிறர் நெகிழ பொய் சொல்லலாம்..
பொய் உரைப்போம்
கொஞ்சம் மெய் மறப்போம்!!!!!

புதன், 3 ஜூன், 2009


பேருந்தல்...

காலை மணி 11
மே மாத வெயில் தமிழகமெங்கும் அடித்து கொண்டிருக்க
சென்னையில் மட்டும் செருப்பை சுழற்றி அடித்து கொண்டிருந்தது !

அத்தனை சூட்டிலும் இந்த வெள்ளைக்காரன் உடையை
வேலை நிமித்தமாய் அணிந்து வந்து
பேருந்துக்காக காத்திருந்தேன்!!!!
அந்த பச்சை தேர் இருமிக்கொண்டே வந்து சேர்ந்தது
பாதி சென்னை பஸ்சில் தான் இருந்தது.
என்னையும் உள்ளே அள்ளி போட்டுகொண்டு
ஊர்வலத்தை தொடக்கியது ஊர்தி!

கால் வைக்க இடம் தெரியாததால் "ஆம்ஸ்ட்ராங்"
போல் நடந்தேன்!
வண்டியில் "ஹோர்ன்" தவிர அனைத்திலும்
சத்தம் வந்தது!!!!

ஒருவர் 4 ரூபாய்க்கு ரேடியோ
ஸ்டேஷன் வாங்கினார்
மற்றொருவர் 3 ரூபாய்க்கு
லைட் ஹவுஸ் வாங்கினார்
இன்னொருவர் 2 ரூபாய்க்கு
தலைமை செயலகமே வாங்கினார்!!!!

ில்லரை இல்லாமல் 10 ரூபாய் தாள் கொடுத்ததால்
கண்டக்டர் டிக்கெட்டுடன் என்னையும்
சேர்த்து கிழித்தார்...

கூட்டம் அதிகமானது.
பேருந்தின் "காற்று இல்லா" பகுதிக்கு தள்ளப்பட்டேன்
அங்கே இருவர் கரங்களுக்கு நடவே
என் தலை மாட்டிக்கொள்ள- டிரைவர்
பிரேக் போடும் போதெல்லாம் எனக்கு
தூக்கு தண்டனை !!!!!!!!!!

அங்கிருந்து திமிரி தப்பித்து தடுமாறுகையில்
என் ஸூக்கள் கூடை கிழவியின்
கால்களை பதம் பார்த்தது!!!
"Very Sorry"
என அவசரமாய் ஆங்கில
சமாதானம் சொன்னேன்...
"
எருமமாதிரி வளந்திருக்கே அறிவு இருக்க?"
என பதிலுக்கு தரமான தமிழ் கேள்வி கேட்டாள்..

அத்தனை கூட்டத்திலும் "பெண்கள் தங்கங்கள்"
என முன்னோர் சொன்னதை நம்பி ஒரு சிலர்
உரசி பார்த்து கொண்டிருந்தனர்!!!!!!!

சில ஊருக்கு புதுசுகள் நிறுத்தத்திற்கு நிறுத்தம்
"
எம்ப்ளாய்மென்ட் ஆபீஸ்" வந்திருச்சா
என கேட்டு கண்டக்டர்ஐ கடுப்பாக்கினர்!!

சென்னை தூசி என் கண்ணில் பட்டு
கண்கள் காவிரி ஆனது
இமைகள் கர்நாடகாவாகி
என் கண்ணீர் அடைத்தது!!!!

கடைசி இருக்கையில் சில தன் மான
தமிழர்கள் ஈழ பிரச்சனையை நீளமாய் பேசினர்.
பின்பு இருக்கைகளில் கொஞ்சம் பரப்பி அமர்ந்தனர்,
இன்னொருவர் வந்தால் இருக்கையில் தாங்கள்
இறுக்கி அமர வேண்டும் என்பதால்!!

என் இடம் வந்தது
பேருந்திலிருந்து துப்ப பட்டேன்..
சட்டை கசங்கி இருந்தது
வெக்கையில் தகித்த வேர்வையில்
குளித்திருந்தேன்.
கை கால்களில் வலித்தது
இருந்தும் சிரித்தேன்.

எனக்கு தெரியும் எல்லா அனுபவங்களுமே
இனிமையானவை தான் நமக்கு
இரசிக்க தெரிந்தால்!!!!!!!!!!!!!

சனி, 30 மே, 2009மின்னல்


மேகத்தை
கசக்கி பூமியில்
கோலம் போட்டார் கடவுள்-மழை

எப்போதும் பெய்தால் "அடை மழை"
எப்போதாவது
பெய்வதால்
நமக்கோ இது "அடடே! மழை"

நிழற்க்குடை நிஜமாக
உதவியது
ஓடி உள்ளே
ஒதுங்கினேன்.
எனக்கு முன் அங்கே அவள்....

மஞ்சள் உடை!
வெள்ளை முகம்!!
கருங்கூந்தல்!!!
அவள் பூமியின் வானவில்!!!!!

மின்னல் வெட்டியது
மழை கலை கட்டியது....

அட நிழற்க்குடை கூட
அவள் மீது சொட்டு சொட்டாக
ஜொள்ளு விடுகிறதே!!!!!

கையை நீட்டி
நீரில் விளையாடினாள்
அது சரி
பூக்களுக்கு நீரை பிடிக்காதா???.....

செல்போன் சிணுசிணுக்க
எடுத்து முணு முணுத்தாள்...
சிரித்து பேசினாள்...

ஒருவேளை காதலனாக
இருப்பா னோ???
அத்தனை மழையிலும்
எனக்கு அடி வயிற்றில் எரிச்சல்.........

யாரோ மழையில்
வழுக்கி விழ....
இவள் குலுங்கி சிரித்தாள்...

மின்னல் மேலே
வெளிச்சம் கீழே.....

அவள் சிரிப்பை மீண்டும் பார்க்க
நானும் விழழாமா என யோசித்தேன்...

அவள் அழகு அழைத்தது எனினும்
என் அறிவு தடுத்தது......

எதாவது பேசுவோம்
என எதார்த்தமாய் யோசித்தேன்....

என்ன பேச
எப்படி ஆரம்பிக்க
என
என் இமயமலை ஆசையில்
இடியாப்ப குழப்பங்கள்....

மழை விட்டது
என் மனதும் விட்டது......
ஆட்டோ வந்தது

ஆசையில் அணுகுண்டு போட்டது!!!!

அவள் வாகனத்தில் ஏறி மறைய,
நான் சிதறி உடைந்தேன்...
வண்டியை விரட்டலாம் என
தமிழ் சினிமா அறிவு தடாலென யோசித்தது....

கால்கள் பரபரக்க
காலடி வைத்தேன்...

அந்த ஆட்டோவின் பின்னால்
"சுடிதாரை தொடராதே.....
சுடுகாட்டை அடைவாய்!!!!"
இப்போது மீண்டும் மின்னல்
வெளிச்சம் என் மூளையில்.....